Asianet News TamilAsianet News Tamil

திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பயங்கரம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீண்டும் தங்கள் சொந்த ஊரான விஜயவாடாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். 

car truck collision.. Six killed in Srikalahasti
Author
First Published Jul 10, 2023, 8:11 AM IST

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீண்டும் தங்கள் சொந்த ஊரான விஜயவாடாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காளஹஸ்தியை நோக்கி  கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியது. இதில், காரில் பயணித்த 7 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: அடேங்கப்பா.. சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?

car truck collision.. Six killed in Srikalahasti

உடனே படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  Delhi Rains : மஞ்சள் அலெர்ட்: டெல்லியை விடாமல் துரத்தும் கனமழை.. வெள்ளத்தால் சிக்கித்தவிக்கும் நகரங்கள்

car truck collision.. Six killed in Srikalahasti

விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து காரில் ஊர் திரும்பும் போது விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios