கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்டத்தை நாளை மறுநாள் கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேல்முறையீடு செய்தவர்களில் தேர்வானவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

10:29 PM (IST) Nov 08
09:10 PM (IST) Nov 08
100 சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் ஹோட்டல் மோசடிக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ஹோட்டல் மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
07:49 PM (IST) Nov 08
ரயில்வே டிக்கெட் பரிமாற்ற விதிகளின்படி, உங்கள் ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
07:19 PM (IST) Nov 08
காற்றின் தரம் குறைந்ததால் மற்ற மாநிலங்களில் இருந்து ஆப்-அடிப்படையிலான டாக்சிகள் நுழைவதை டெல்லி தடை செய்துள்ளது.
07:08 PM (IST) Nov 08
Lambretta Elettra எலக்ட்ரிக் ஸ்கூட்டர் EICMA இல் வெளியிடப்பட்டது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
06:23 PM (IST) Nov 08
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் அணிந்திருந்த ஆடை, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.
05:44 PM (IST) Nov 08
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்கிட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
04:18 PM (IST) Nov 08
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
04:13 PM (IST) Nov 08
நுகர்பொருள் வணிப கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 % போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
03:56 PM (IST) Nov 08
இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நான் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றால், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் நாட்டை கொண்டு செல்வேன் என்று கூறினார்.
03:50 PM (IST) Nov 08
நவம்பர் மாதத்துக்கான வரிப் பங்கீட்டை மாநிலங்களுக்கு விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
03:32 PM (IST) Nov 08
கவாஸாகியின் புதிய நிஞ்ஜா 500 மற்றும் Z 500 ஐ இத்தாலியில் நடைபெற்ற EICMA 2023 இல் வெளியிட்டது. இது வாகன பிரியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
03:13 PM (IST) Nov 08
ஆப்பிள் ஐபோன் 12 ரூ. 35,000 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் வெறும் 4,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. தள்ளுபடி பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
02:40 PM (IST) Nov 08
சீமான் - விஜய் அரசியல் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
01:59 PM (IST) Nov 08
மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சைக்குரிய வகையில் சைகை காட்டி பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்
12:48 PM (IST) Nov 08
செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் செல்லும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
12:20 PM (IST) Nov 08
பிக்பாஸ் வீட்டில் வினுஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிக்சனை கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
11:24 AM (IST) Nov 08
கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜப்பான் படத்தில் இடம்பெற்ற டச்சிங் டச்சிங் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
10:52 AM (IST) Nov 08
வினுஷா குறித்து பிக்பாஸ் போட்டியாளர் நிக்சன் சொன்ன கேவலமான கமெண்ட்டை குறும்படம் போட்டுக்காட்டியதால் ஹவுஸ்மேட்ஸ் அவரை சரமாரியாக சாடி உள்ளனர்.
10:41 AM (IST) Nov 08
அண்ணாமலை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என கரூர் எம்.பி. ஜோதிமணி சாடியுள்ளார்
09:58 AM (IST) Nov 08
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்டத்தை நாளை மறுநாள் கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேல்முறையீடு செய்தவர்களில் தேர்வானவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.
09:55 AM (IST) Nov 08
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:21 AM (IST) Nov 08
கோவையில் பிரபல தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
09:05 AM (IST) Nov 08
கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அவர் விஜய் மற்றும் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
08:43 AM (IST) Nov 08
சோதனையின் போது வருமான வரித்துறையினர் எனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கியுள்ளனர். அதிகாரிகளை குறை கூற விரும்பவில்லை. அம்பு எய்தவர்கள் எங்கோ உள்ளனர். கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு உதவியாளர் நிர்பந்திக்கப்பட்டார். கேள்வி கேட்பது தவறல்ல. அச்சுறுத்தக்கூடாது. எனது குடும்பத்தினர் வீட்டில் மற்றும் கல்வி நிறுவனத்தில் இருந்து ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
08:09 AM (IST) Nov 08
சென்னை புறநகர் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
07:52 AM (IST) Nov 08
சமுகநீதியை நோக்கிய துணிச்சலான பயணத்தில் பீகாருடன் தமிழ்நாடும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
07:51 AM (IST) Nov 08
உதவி கல்வித்துறை அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற 85 வயது மாமனார் தனது மருமகளை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.