அடிதூள்.. அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

நுகர்பொருள் வணிப கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

Tamil Nadu Government has ordered to giving 20% bonus to the TAMILNADU CIVIL SUPPLIES CORPORATION Employees-rag

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் “C” மற்றும் “D” பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

Tamil Nadu Government has ordered to giving 20% bonus to the TAMILNADU CIVIL SUPPLIES CORPORATION Employees-rag

போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tamil Nadu Government has ordered to giving 20% bonus to the TAMILNADU CIVIL SUPPLIES CORPORATION Employees-rag

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49023 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios