அண்ணாமலை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்: கொந்தளித்த ஜோதிமணி!

அண்ணாமலை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என கரூர் எம்.பி. ஜோதிமணி சாடியுள்ளார்

Karur MP Jothimani slams annamalai as he dont know anything in politics smp

என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கரூர் எம்.பி. ஜோதிமணிக்கு கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பணம் அனுப்பினார். அதற்கு ஆதாரம் உள்ளது. பெண் என்பதால் அவரை விட்டு வைக்கிறேன். பிழைத்துப் போகட்டும்.” என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கரூர் எம்.பி., ஜோதிமணி, “அண்ணாமலை, நான் பெண் என்பதால் பிழைத்து போகட்டும் என விட்டிருப்பதாக சொல்லியுள்ளார். இதை சொல்ல அண்ணாமலை யார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி எம்.பி., “மக்களிடம் இருந்து கொள்ளையடித்து, தமிழ்நாட்டில் ஒரு வசூல் ராஜாவாகி, அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில்தான் அண்ணாமலையை இப்படி பேசுகிறார். அண்ணாமலையால் என்னை என்ன செய்ய முடியும். அதிகபட்சம், அண்ணாமலையின் கையிலும், பாஜகவின் கையிலும் இருப்பது அமலாக்கத்துறைதான். அதைத்தான் எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் ஏவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால், அமலாக்கத்துறையை என் வீட்டுக்கு அனுப்பட்டும், அங்கு கஞ்சி போட்ட காட்டன் சேலையை தவிர வேறு எதுவும் கிடைக்காது.” என்றார்.

கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு உதவியாளரை டார்ச்சர் செய்தாங்க! இதெற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை! அமைச்சர் எ.வ.வேலு

“அண்ணாமலையை போல மணல் மாபியாக்களிடம் மாதம் ரூ.60 லட்சம் வாங்கிக் கொண்டு, ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ வில்லை. வீட்டுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் வீட்டுக்கு வாடகை குறித்து இன்று வரை அண்ணாமலை பதில் சொல்லவில்லை. சிலர் வேண்டுமானால் இந்த மிரட்டல்களுக்கு பயப்படலாம். நான் அதற்கான ஆள் கிடையாது.” என்று ஜோதிமணி தெரிவித்தார்.

அண்ணாமலை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று சாடிய ஜோதிமணி எம்.பி., “பெண்கள் மீது தனிப்பட்ட முறையில், கழிசடை அரசியல் நடத்துகிற அரசியல்வாதிதான் அண்ணாமலை. கர்நாடகா மாநில காவல் துறையில் இருந்த கருப்பு ஆடு அவர். அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத அண்ணாமலைக்கு, தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தது. . மணல் மாபியாக்களிடம், ரூ.60 லட்சம் வாங்கியதாக சென்னை, பாஜக அலுவலகத்தில் வேலை செய்தவர் வீட்டுக்கு அமலாக்கத்துறை சென்றது.ஆனால், சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்காமல், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏன் சென்றனர் என்பதற்கு பதில் இல்லை.” என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசு பதவியில் எதிலும் இல்லாமல் உள்ள அண்ணாமலைக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்பு காரணமாக, ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை செலவாகிறது. எம்.பி., என்ற முறையில் நான் விமானத்தில் முதல் வகுப்பில் கூட செல்வது இல்லை. இவர் எப்படி என்னை கேள்வி கேட்கலாம். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அண்ணாமலையின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்.” என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios