தேனி எம்பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு. 30 நாட்களுக்கு தீர்ப்பை ஒத்தி வைத்து இருப்பதால் எம்பியாக ரவீந்திரநாத் நீடிப்பார். மேல்முறையீடுக்கு செல்லலாம் என்று நீதிபதி உத்தரவு.

05:03 PM (IST) Jul 06
சென்னையில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புறநகர் ரயில் சேதமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
05:03 PM (IST) Jul 06
தமிழகத்தில் தொழில்துறையை முடக்கும் திறனற்ற திமுக அரசு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்
05:02 PM (IST) Jul 06
சென்னை எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.14லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
03:50 PM (IST) Jul 06
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள முக்கிய கூட்டதில் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்
03:49 PM (IST) Jul 06
அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்
02:06 PM (IST) Jul 06
அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பயனர்களை மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் ஆப் பெற்றுள்ளது
02:06 PM (IST) Jul 06
ஒரு நபரின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தை எடுத்து கொண்டு குரங்கு ஒன்று மரத்தின் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
02:06 PM (IST) Jul 06
மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பினரின் போராட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
02:05 PM (IST) Jul 06
பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டங்கள் தொடர்பான ஆளுநரின் கருத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்
02:05 PM (IST) Jul 06
அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது
02:04 PM (IST) Jul 06
உதவி பேராசிரியர் பணிக்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய உத்தரவால் முனைவர் பட்டம் பெற்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்
02:04 PM (IST) Jul 06
தமிழகத்துக்கான காவரி நீரை கர்நாடகம் உடனே வழங்க வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்
02:03 PM (IST) Jul 06
திமுக இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்தில் அக்கட்சியின் தர்மபுரி எம்.பி., தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்
11:30 AM (IST) Jul 06
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்க உள்ளது.
09:50 AM (IST) Jul 06
திருப்பத்தூர் அருகே தனது கணவனை மாமனாருடன் சேர்ந்து மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:46 AM (IST) Jul 06
4 தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
08:04 AM (IST) Jul 06
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இரண்டு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து 3வது நீதிபதி முன்பு இன்று விசாரணை நடைபெற உள்ளது.
07:23 AM (IST) Jul 06
சென்னையில் 411வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
07:23 AM (IST) Jul 06
தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
07:22 AM (IST) Jul 06
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்க உள்ளது.