பொன்முடியின் அமைச்சர் பதவி தப்புமா? இன்று வெளியாகிறது தீர்ப்பு! உச்சக்கட்ட பதற்றம்!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

Judgment in the case against Minister Ponmudi today

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்க உள்ளது. 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

இதையும் படிங்க;- போதிய ஆதாரம் இல்லை... சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை; வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு

Judgment in the case against Minister Ponmudi today

அதாவது பொன்முடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த இடத்தில் சட்டவிரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்பில் அங்கு கட்டிடம் கட்டியதாக கடந்த 2003-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 27-08-2003ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  விசாரணையை முடித்து 2.9.2004 அன்று பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

Judgment in the case against Minister Ponmudi today

இந்நிலையில்,  இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 26ம் 2007ம் ஆண்டு பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 2017ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. 

இதையும் படிங்க;- மதுரை உயர் நீதிமன்றக் கிளை கலைஞர் போட்ட பிச்சை.. உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன்.. வருத்தம் தெரிவித்த எ.வ.வேலு!

Judgment in the case against Minister Ponmudi today

இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. முன்னாள் ஆட்சியர் ராஜரத்தினம் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்  இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. பொன்முடிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் அவர் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்பது குறிப்பித்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios