Published : Nov 05, 2023, 07:16 AM ISTUpdated : Nov 05, 2023, 09:52 PM IST

Tamil News Live Updates: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tamil News Live Updates: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

09:52 PM (IST) Nov 05

மழையில் அலங்கோலமான அரசு பள்ளி.. கண்டுகொள்ளாத கோவை மாநகராட்சி நிர்வாகம் - வைரல் வீடியோ

மழையில் அலங்கோலமான அரசு பள்ளியை தற்பொழுதுவரை தூய்மை படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது கோவை மாநகராட்சி நிர்வாகம். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

09:37 PM (IST) Nov 05

வீட்டுக் கடன் வாங்க போறீங்களா? வெயிட் பண்ணுங்க.. அதிரடி சலுகைகளை வழங்கும் வங்கிகள்..

பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்களில் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன வங்கி நிறுவனங்கள். இதனைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

07:54 PM (IST) Nov 05

இந்த கிராமத்துக்கு சென்றால் ரூ. 25 லட்சம் கிடைக்கும்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..

இந்த கிராமம் அங்கு செல்ல ரூ. 25 லட்சம் கொடுக்கும். ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த விஷயம் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

07:21 PM (IST) Nov 05

90 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டம்.. முழு விபரம் இதோ..

ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தின் மூலம் 90 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி இணையம், ஜியோ சினிமாவில் உங்களுக்குப் பிடித்த தொடர்கள் மற்றும் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்கலாம்.

06:29 PM (IST) Nov 05

2024 தேர்தலை குறிச்சு வச்சுக்கோங்க.. திமுக வாக்குச்சாவடி கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்காக எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொண்டு வராமல் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. தமிழ்நாடு என்ற அடையாளத்தை பாஜக சிதைக்க நினைப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

05:55 PM (IST) Nov 05

பாஜக - அதிமுக துரோகங்களை மக்களுக்கு சொல்ல வேண்டும்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !!

இந்தியாவிலேயே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை மாநாடு போல் நடத்தும் ஒரே கட்சி திமுகதான் என்று கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

05:21 PM (IST) Nov 05

ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ பயணிக்கலாம்.. ரூ.32 ஆயிரம் விலை குறைப்பு.. சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைக்கிறீர்களா? உங்களுக்கான  நல்ல செய்தி தான் இது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரும் தள்ளுபடி சலுகையுடன் கிடைக்கும்.

03:53 PM (IST) Nov 05

வானதி சீனிவாசன் பூரண நலம் பெற கோயில்களில் சிறப்பு வழிபாடு!

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பூரண உடல்நலம் பெற வேண்டி கோவையில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன

03:44 PM (IST) Nov 05

நடிகர் விஜய்க்கு வெற்றிமாறன் கொடுத்த அட்வைஸ்

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக பரவலாக பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அவருக்கு அட்வைஸ் ஒன்றை கூறி உள்ளார்.

03:31 PM (IST) Nov 05

கம்மி விலையில் தாய்லாந்தை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி தாய்லாந்திற்கு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. குறைந்த கட்டணத்தில், தாய்லாந்தை சுற்றி பார்க்க விரும்புபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

03:28 PM (IST) Nov 05

பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை: காங்கிரஸை வறுத்தெடுத்த பிரதமர் மோடி!

பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை என மத்தியப்பிரதேச மாநில தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

03:06 PM (IST) Nov 05

3 ஜிபி கூடுதல் டேட்டா.. அன்லிமிடெட் ஆஃபர் இத்தனை நாளைக்கா.. பிஎஸ்என்எல் தீபாவளி சலுகை..

பிஎஸ்என்எல் சிறந்த சலுகை திட்டத்தில் 3ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். இதனை எப்படி பயன்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

02:41 PM (IST) Nov 05

ரேகாவை பலவந்தமா லிப்கிஸ் அடிச்ச நீங்கல்லாம் பெண்கள் உரிமை பற்றி பேசலாமா? கமலை கழுவிஊற்றிய யுகேந்திரன் மனைவி

ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிய நடிகர் கமல்ஹாசனை யுகேந்திரனின் மனைவி மாலினி சரமாரியாக சாடி உள்ளார்.

02:30 PM (IST) Nov 05

முன்பதிவில் இந்தி: சரி செய்த இண்டேன் - சு.வெங்கடேசன் எம்.பி அலர்ட்!

விழிப்போடு இருப்போம். மொழி உரிமை காப்போம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்

01:58 PM (IST) Nov 05

கிரிமினல் வழக்கு தொடுக்க பாஜக திட்டம்: மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டு!

என் மீது கிரிமினல் வழக்குகளை தொடுக்க பாஜக திட்டமிட்டு வருவதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்

01:49 PM (IST) Nov 05

அவர் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. ‘காஞ்சனா 2’ல நடிக்க ஆசைப்பட்ட ரஜினிக்கு நோ சொன்னது ஏன்? லாரன்ஸ் விளக்கம்

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் அடித்த காஞ்சனா 2 படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது ரஜினிகாந்த் தான் என ராகவா லாரன்ஸ் கூறி இருக்கிறார்.

12:55 PM (IST) Nov 05

பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பின்... போட்டியாளர்களுக்கு ஸ்வீட் அனுப்பிய கமல் - காரணம் என்ன?

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய கமல்ஹாசன், தற்போது ஹவுஸ்மேட்ஸுக்கு அல்வா அனுப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.

11:37 AM (IST) Nov 05

மத்தியகிழக்கு அரபிக்கடலில் வரும் 8ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

மத்தியகிழக்கு அரபிக்கடலில் வரும் 8ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

11:19 AM (IST) Nov 05

தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கினாரா கமல்? ரெட் கார்டு சர்ச்சையால் சீறும் நெட்டிசன்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்றியது கமலின் அரசியல் லாபத்திற்காக செய்யப்பட்டது என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

11:01 AM (IST) Nov 05

பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கு! நிபந்தனை ஜாமீனில் வந்த நடிகைக்கு கையில் சூடம் ஏத்தி ஆரத்தி எடுத்த பாஜக பெண்!

மாநகர பேருந்து படிக்கெட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட அவருக்கு பாஜகவினர் கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்தனர்.

10:08 AM (IST) Nov 05

ஒன்னு அவன் இருக்கனும்... இல்ல நான் இருக்கனும்! பிரதீப்பால் பிக்பாஸில் இருந்து வெளியேற முடிவெடுத்த கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் கமல்ஹாசன், இந்நிகழ்ச்சியை விட்டு விலக முடிவெடுத்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

09:38 AM (IST) Nov 05

திமுக ஆட்சியை முடக்க தமிழக ஆளுநரை பயன்படுத்துகிறார்கள்.. பாஜகவின் பகல் கனவு பலிக்காது.. கே.எஸ்.அழகிரி.!

மக்கள் நலன்சார்ந்து தமிழக அரசு செயல்படுவதாலும், மதச்சார்பற்ற கூட்டணியின் ஒற்றுமையினாலும் மக்கள் பேராதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிற நிலையில் பா.ஜ.க.வின் பழிவாங்கும் போக்கு நிச்சயமாக முறியடிக்கப்படும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

09:11 AM (IST) Nov 05

கமல் ரெட் கார்டு கொடுத்ததற்கு எதிர்ப்பு... ஓங்கி அறைந்த பிரதீப்பை அரவணைத்து கவின் போட்ட உருக்கமான பதிவு

ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்புக்காக அவரது நண்பர் கவின் போட்ட உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.

08:32 AM (IST) Nov 05

நள்ளிரவில் மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி..! காரணம் என்ன.?

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு அதிகமான காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டார். இதனையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

07:30 AM (IST) Nov 05

கோவிலில் அர்ச்சனை செய்து வீடு தேடி சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. காலை தொட்டு வணங்கிய புஸ்ஸி ஆனந்த்.!

விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவரது வீட்டிற்கே சென்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து நலம் விசாரித்துள்ளார். 

07:29 AM (IST) Nov 05

ரஞ்சனா நாச்சியாருக்கு ஒரு சட்டம்.! திமுக எம்எல்ஏவுக்கு ஒரு சட்டமா? நாராயணன் திருப்பதி காட்டமான கேள்வி.!

பிரதமரை தரக்குறைவாக பேசிய, ஒருமையில் விமர்சித்த திமுகவின் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனை கைது செய்யாதது ஏன்? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 


More Trending News