Asianet News TamilAsianet News Tamil

கிரிமினல் வழக்கு தொடுக்க பாஜக திட்டம்: மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டு!

என் மீது கிரிமினல் வழக்குகளை தொடுக்க பாஜக திட்டமிட்டு வருவதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்

BJP planning crminal cases against me alleges Mahua Moitra smp
Author
First Published Nov 5, 2023, 1:47 PM IST

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் பெற்றதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து, நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இக்குழுவின் முன்பு கடந்த 2ஆம் தேதி ஆஜரான மஹுவா மொய்த்ரா, கேவலமான கேள்விகளை கேட்பதாக கூறி விசாரணையில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.

இந்த நிலையில், தன் மீது கிரிமினல் வழக்குகளை தொடுக்க பாஜக திட்டமிட்டு வருவதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “என் மீது கிரிமினல் வழக்குகளை தொடுக்க பாஜக திட்டமிடுகிறது. அவர்களை வரவேற்கிறோம். என்னிடம் எத்தனை ஜோடி ஷூக்கள் உள்ளன என்று கேள்வி எழுப்பும் முன், ரூ.1,30,000 கோடி நிலக்கரி ஊழல் தொடர்பாக அதானிக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாகத்துறையினர் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.” என பதிவிட்டுள்ளார்.

காற்று மாசு: டெல்லியில் நவ.10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

முன்னதாக, புகழ்பெற்ற பிரிட்டிஷ் செய்தித்தாள், பைனான்சியல் டைம்ஸ், ‘அதானி மற்றும் மர்மமான நிலக்கரி விலைகள்’ என செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

 

 

இருப்பினும், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதானியின் முறைகேட்டால்தான் பொதுமக்களின் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கி இந்தியாவில் பலமடங்காக அதானி குழுமம் விற்பனை செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கவுதம் அதானி இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்குகிறார். அது இந்தியாவை அடையும் நேரத்தில், அதன் விலை இரட்டிப்பாகும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் பைகளில் இருந்து சுமார் ரூ.32,000 கோடி அவர் எடுத்துள்ளார்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios