AUS vs NED: நெதர்லாந்தை துவம்சம் செய்த ஆஸ்திரேலியா – வார்னர், மேக்ஸ்வெல் சதம் – ஆஸி.,399 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Oct 25, 2023, 6:52 PM IST

நெதர்லாந்திற்கு எதிரான 24ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.


ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 24 ஆவது லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்துள்ளார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக கேமரூன் க்ரீன் இடம் பெற்றுள்ளார். ஆனால், நெதர்லாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

SA vs BAN: அரையிறுதி வாய்ப்பு அவ்வளவு தான் – 5ஆவது இடம் பிடிக்க கடைசி வரை போராடுவோம் – ஷாகிப் அல் ஹசன்!

Tap to resize

Latest Videos

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசல்வுட், ஆடம் ஜம்பா.

நெதர்லாந்து:

விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிதமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலாஃப் வான் டெர் மெர்வெ, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.

Asian Para Games: ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற சுந்தர் சிங், ரிங்கு ஹூடா, அஜீத் சிங் யாதவ்!

இதையடுத்து டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மார்ஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஸ்மித் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி ஒட்டு மொத்தமாக உலகக் கோப்பையில் 9ஆவது அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 132 ரன்கள் குவித்தது. இறுதியாக ஸ்மித் 68 பந்துகளில் 9 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Hangzhou Asian Para Games: 1500 மீ T11 பிரிவில் இந்தியாவின் அங்கூர் தாமா தங்கம் வென்று சாதனை!

அதன் பிறகு வந்த மார்னஷ் லபுஷேன் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 9ஆவது அரைசதத்தை அடித்தார். அதன் பிறகு 47 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினார்.இதற்கிடையில் தொடக்க வீரரான வார்னர் இந்த உலகக் கோப்பையில் தனது 2ஆவது சதம் அடித்தார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 22அவது சதத்தை பதிவு செய்தார். இதுதவிர உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளார். இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பைகளில் 6 சதங்கள் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் ரோகித் சர்மாவின் சதங்கள் (7) சாதனையை சமன் செய்வார்.

Australia vs Netherlands: மார்கஸ் ஸ்டோய்னிஸ் விலகல் – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்!

குறைவான இன்னிங்ஸ்களில் (153 இன்னிங்ஸ்) விளையாடி 22 சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஜோஷ் இங்கிலிஸ் 14 ரன்களில் வெளியேற, டேவிட் வார்னர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீன் ஜோடி சேர்ந்தனர். இதில் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். மேலும், சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசித்தள்ளினார். இதற்கிடையில் க்ரீன் 8 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.

Hardik Pandya: கணுக்கால் காயம், இங்கிலாந்து, இலங்கை போட்டியிலும் ஹர்திக் பாண்டியா இடம்பெற வாய்ப்பில்லை!

இவரைத் தொடர்ந்து பேட் கம்மின்ஸ் களமிறங்கினார். மேக்ஸ்வெல் 27 பந்துகளில் அரைசதம் அடித்து ஒரு நாள் போட்டிகளில் 24ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அதன் பிறகு வெறும் 13 பந்துகளில் 2ஆவது அரைசதம் அடித்து மொத்தமாக 40 பந்துகளில் இந்த உலகக் கோப்பையில் தனது முதல் சதம் அடித்தார்.

இதன் மூலமாக குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்திருந்தார். ஏபி டிவிலியர்ஸ் 52 பந்துகளில் சதம் அடித்திருந்தார். கடைசியாக மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக கம்மின்ஸ் 12 ரன்கள், ஆடம் ஜம்பா 1 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

CWC 2023: ஒரு நாள் விடுமுறை - தரம்சாலாவில் சுற்றுலா சென்ற இந்தியா டீம்!

பவுலிங்கைப் பொறுத்த வரையில் நெதர்லாந்து அணியில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளும், பாஸ் டி லீட் 2 விக்கெட்டுகளும், ஆர்யன் தத் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். கடின இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.

click me!