நெதர்லாந்து அணிக்கு எதிரான 24 ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 24 ஆவது லீக் போட்டி டெல்லியில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்துள்ளார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக கேமரூன் க்ரீன் இடம் பெற்றுள்ளார். ஆனால், நெதர்லாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசல்வுட், ஆடம் ஜம்பா.
நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிதமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலாஃப் வான் டெர் மெர்வெ, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
CWC 2023: ஒரு நாள் விடுமுறை - தரம்சாலாவில் சுற்றுலா சென்ற இந்தியா டீம்!