இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் நடப்பு சாம்பியன் Mohun Bagan FC Team!

By Rsiva kumar  |  First Published Sep 26, 2023, 1:46 PM IST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இதுவரையில் நடந்த போட்டிகளின் படி நடப்பு சாம்பியனான மோகன் பாகன் எஃப் சி டீம் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலுள்ளது.


இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) என்பது இந்திய கால்பந்து லீக் அமைப்பில் ஆண்களுக்கான மிக உயர்ந்த போட்டி தொடர் ஆகும். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு லிமிடெட் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரின் முதல் தொடர் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி நடத்தப்பட்டது.

Pakistan Visa: ஒரு வழியாக பாகிஸ்தானுக்கு விடிவு காலம் பொறந்தாச்சு; விசா கிடைத்து இந்தியா வரும் பாக். டீம்!

Tap to resize

Latest Videos

undefined

முதல் சீசனில் Atletico de Kolkata (அட்லெடிகோ டி கொல்கத்தா - ஏடிகே) அணி முதல் முறையாக சாம்பியனானது. 2ஆவது சீசனில் சென்னையின் எஃப் சி அணி சாம்பியனானது. கடந்த சீசனில் ஏடிகே மோகன் பாகன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்த நிலையில், 2023-2024 ஆம் ஆண்டுக்கான 10ஆவது சீசன் கடந்த 21 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது.

ICC ODI World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான புதிய போஸ்டர் வெளியீடு!

இதில் பெங்களூரு, சென்னையின், ஈஸ்ட் பெங்கால், கோவா, ஹைதராபாத், ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மோகன் பாகன் சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை சிட்டி, ஒடிசா, பஞ்சாப், நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆகிய 12 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

World Cup Anthem: உலகக் கோப்பைக்கான ஆந்தம் பாடல் வீடியோவில் ரன்வீர் சிங்: ப்ரிதம் இசையில் வைரலாகும் வீடியோ!

இந்த ஐஎஸ்.எல். தொடரானது வரும் கடந்த 21 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 29 ஆம் தேதி வரையில் நடத்தப்படுகிறது. செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான சீசன் 22-சுற்று வழக்கமான சீசனை உள்ளடக்கியது, அதைத் தொடர்ந்து முதல் 6 அணிகளை உள்ளடக்கிய பிளே ஆஃப்கள், சாம்பியன்களை தீர்மானிக்க ஐஎஸ்எல் இறுதிப்போட்டியுடன் முடிவடைகிறது. வழக்கமான சீசனின் முடிவில், அதிக புள்ளிகள் பெற்ற அணி முதன்மையாக அறிவிக்கப்பட்டு லீக் வெற்றியாளர்களின் கேடயம் வழங்கப்படும். அதன்படி கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் கேரளா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Hangzhou Asian Games 2023: ஆண்கள் ஹாக்கியில் இந்தியா அபார வெற்றி – 28ஆம் தேதி ஜப்பானை எதிர்கொள்கிறது!

இதே போன்று, 22 ஆம் தேதி நடக்க இருந்த ஹைதராபாத் எஃப் சி மற்றும் கோவா எஃப் சி அணிகளுக்கு இடையிலான போட்டியானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி நடந்த போட்டியில் ஒடிசா எஃப் சி அணியும், சென்னையின் எஃப் சி அணியும் மோதின. இதில், ஒடிசா எஃப் சி அணியானது 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இதே போன்று அதே நாளில் நடந்த மற்றொரு போட்டியில் மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட் எஃப்சி அணியும், பஞ்சாப் எஃப்சி அணியும் மோதின. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான மோகன் பாகன் எஃப் சி அணியானது 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் கடத்தப்பட்டாரா? விளக்கம் கொடுத்த கவுதம் காம்பீர்!

கடந்த 24 ஆம் தேதி நடந்த போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப் சி அணியும், மும்பை சிட்டி எஃப்சி அணியும் மோதின. இதில், மும்பை சிட்டி அணியானது 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஃப் சி அணியும், ஜாம்ஷெட்பூர் எஃப் சி அணியும் மோதின. இதில், எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில் போட்டியானது டிராவில் முடிந்துள்ளது. இன்று எந்த போட்டியும் இல்லாத நிலையில், நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மோகன் பாகன் எஃப் சி அணியும், பெங்களூரு எஃப் சி அணியும் மோதுகின்றன.

Asia Games: வரலாற்று வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி – கிரிக்கெட்டிற்கு முதல் முறையாக தங்கம் கைப்பற்றி சாதனை!

இதுவரையில் நடந்த போட்டிகளின் படி நடப்பு சாம்பியனான மோகன் பாகன் எஃப் சி டீம் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலுள்ளது. 2ஆவது இடத்தில் ஒடிசா எஃப்சி அணியும், 3ஆவது இடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், 4ஆவது இடத்தில் மும்பை சிட்டி அணியும் இடம் பெற்றுள்ளன.

click me!