இந்தியன் சூப்பர் லீக் தொடர் தான் இந்திய கால்பந்தாட்டத்தை உலக அரங்கில் கொண்டு சேர்த்தது.
இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஐ-லீக் என்ற கால்பந்து தொடர் மிகப்பிரபலம். அதை கால்பந்து ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்ததுடன் கொண்டாடினர். ஆனால் அதை விட இந்திய கால்பந்து ரசிகர்களால் பன்மடங்கு அதிகமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்ததும், ரசிகர்களால் கொண்டாடப்படுவதும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) தொடர் தான். இந்திய கால்பந்து உலகின் முகத்தையே மாற்றியது ஐ.எஸ்.எல். 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஐ.எஸ்.எல் தொடரில் 8 அணிகள் ஆடிவந்த நிலையில், இப்போது 11 அணிகள் ஆடுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய கால்பந்து தொடர் இதுதான்.
Mohun Bagan மற்றும் East Bengal இடையேயான போட்டி ஒரு காலத்தில் மிகப்பிரபலமான போட்டி. அந்த போட்டி நடக்கும் தினத்தன்று டிஆர்பி எகிறும். மேலும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) மற்றும் FSDL ஆகியவை இந்த இரு அணிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்தன. இந்த இரண்டு இந்திய கால்பந்தாட்ட ஜாம்பவான்களுடன், மற்றவர்களும் வந்துள்ளனர். இப்போது ஐஎஸ்எல் 8வது சீசனில் கால்பந்து ஆட்டம், மீண்டும் பல இந்திய கால்பந்து ரசிகர்களின் தொலைக்காட்சி பெட்டிகளை எட்டியுள்ளது.
undefined
மும்பை சிட்டி எஃப்சி அணி நடப்பு சீசனில் ஆடிய போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் 2, 3 மற்றும் 4ம் இடங்களில் முறையே ஒடிசா எஃப்சி, சென்னையின் எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் உள்ளன.
ஐ.எஸ்.எல்லின் 2 வலிமை வாய்ந்த அணிகளான பெங்களூரு எஃப்சி மற்றும் கிழக்கு பெங்கால் அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. 3 முறை சாம்பியனான ஏடிகே மொஹுன் பகான் புள்ளி பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் குறைந்த போட்டிகளே நடந்திருப்பதால், எந்த நேரத்திலும் புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் நடப்பு சாம்பியனுக்கே அதிக வாய்ப்பு என்று சொல்லலாம். அதற்கு காரணம், அந்த அணியில் 5 வீரர்கள் இதுவரை 2க்கும் அதிகமான கோல்கள் அடித்திருக்கிறார்கள். இதுவரை ஆடிய 5 போட்டிகளில் நடப்பு சாம்பியன் அணி 16 கோல்கள் அடித்திருக்கிறது. ஆட்டத்திற்கு சராசரியாக 3 கோல்கள் என்பது மிகப்பெரிய விஷயம்.
ஐ.எஸ்.எல் நடப்பு சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும்? மும்பை சிட்டி எஃப்சி அணி 2வது முறையாக கோப்பையை வெல்லுமா? அல்லது இந்த சீசனில் புதிய அணி முதல் முறையாக கோப்பையை வெல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை ஐ.எஸ்.எல் போட்டிகளை பார்த்து மகிழுங்கள்.