ISL 2022: 3-1 என்ற கோல் கணக்கில் கிழக்கு பெங்காலை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Oct 7, 2022, 9:55 PM IST
Highlights

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் கிழக்கு பெங்கால் எஃப்சி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி  அணி அபார வெற்றி பெற்றது.
 

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் கடந்த சீசனின் ரன்னர் அப் அணியான கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த கிழக்கு பெங்கால் அணியும் மோதின.

கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் முதல் பாதி முழுக்க இரண்டு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்க போராடின. ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. அதனால் முதல் பாதி முடிவில் 0-0 என்றே இருந்தது.

இதையும் படிங்க - 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு அணி தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம்.! பாவம் தேர்வாளர்கள் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

ஆட்டத்தின் 2ம் பாதியில் சரியாக 72வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அட்ரியான் லுனா கோல் அடித்து கணக்கை தொடங்கிவைக்க, அதன்பின்னர் ஆட்டத்தின் 82வது நிமிடம் மற்றும் 89வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் வீரர் இவான் வோலோடிமிரோவிச் 2 கோல்கள் அடித்தார்.

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் கிழக்கு பெங்கால் எஃப்சி அணியின் அலெக்ஸ் மாண்டைரோ டி லிம் ஒரு கோல் அடித்தார். அதைத்தவிர பெங்கால் அணி வேறு கோல் அடிக்கவில்லை. அந்த அணி வீரர்கள் எவ்வளவோ முயன்றும், கேரளா பிளாஸ்டர்ஸ் வீரர்கள் அவர்களை கோல் அடிக்க அனுமதிக்கவில்லை.

இதையும் படிங்க - இந்திய அணியை பார்த்தா பெரிய ஆச்சரியமா இருக்கு..! மிரண்டுபோன பாக்., முன்னாள் ஜாம்பவான்

இதையடுத்து 3-1 என்ற கோல் கணக்கில் கிழக்கு பெங்கால் எஃப்சி அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி அபார வெற்றி பெற்றது.
 

click me!