இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 24.05.2023

Published : May 24, 2023, 07:50 AM IST
இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 24.05.2023

சுருக்கம்

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 24.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள துர்வாவில் புதுப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற வளாகம் பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய உயர் நீதிமன்றமாக உருவாகியுள்ளது. இதனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார்.

திரௌபதி முர்மு

ஆவின் நிறுவனம் லிட்டருக்கு ரூ.32 முதல் ரூ.34 வரை கொள்முதல் விலை கொடுக்கிறது. ஆனால், அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.36 வரை தரத் தயாராக இருக்கிறது.

ஆவின் பால் விற்பனைக்கு ஆபத்தா?

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது. அவர்களிடம், கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மீனவர்கள் கைது

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாள் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார்.

குமரன் பெரியசாமி

மதுரையில் திருமணம் முடிந்த கையோடு தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை திருமண மேடையில் உறவினர்களுக்கு அறிமுகபடுத்திய மணப்பெண்.

ஜல்லிக்கட்டு

கர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு இல்லை என்று கூறிய காங்கிரஸ் தலைவர் எம்பி பாட்டீலின் கருத்துக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் பதிலளித்துள்ளார்

டி.கே.சிவகுமார்

அடுத்தடுத்து நடந்த வெடி விபத்துகளைத் தொடர்ந்து மேற்கு வங்க காவல்துறை நடத்திய சோதனையில் 34,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 132 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

34,000 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்

உலகின் இரண்டாவது சிறிய நாடான மொனாக்கோ, அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெற்றுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் $2,34,317 ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி.

மொனாக்கோ

கிராம சபை கூட்டங்களைப் போல நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு நான்கு முறை ஏரியா சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஏரியா சபை கூட்டங்கள்

அடுத்த சில ஆண்டுகளுக்கு வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட ஜி20 உறுப்பு நாடாக இந்தியா தொடரும் என மூடிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

மூடிஸ் அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை பண்பைப் பாராட்டி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவில் 5ஜி, 6ஜி, 7ஜி கிடையாது, குருஜி மட்டுமே இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் குருஜி மட்டுமே

உத்தரப்பிரதேசத்தில் 4 வயது குழந்தை ஒன்று சாக்லேட் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 வயது குழந்தை பலி

சிட்னியில் இந்திய வம்சாவளியினர் தங்கள் பாரம்பரிய விழாக்களை கொண்டாடும் மையத்தில் பிரதமர் மோடி உணர்ச்சிபொங்க உரை நிகழ்த்தினார். இதில், சுமார் 20000 மக்கள் கூடி மோடி - மோடி என கோஷம் எழுப்பினர்.

சிட்னியில் வீசிய மோடி அலை

பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமாகாது என்று மகாராஷ்டிர மாநில அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்தால்தான் அதை குற்றம் எனக் கூறலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பாலியல் தொழில் குற்றம் அல்ல

நடிகை நயன்தாரா, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கை வாங்கி, அந்த இடத்தில் புதிய மல்டிபிளக்ஸ் கட்ட உள்ளதாக வெளியான தகவல் குறித்த உண்மை, தற்போது வெளியாகி உள்ளது.

நயன்தாரா

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி ஷூட்டிங்

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு
 

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!