Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் 5G, 6G, 7G எதுவும் கிடையாது, குருஜி மட்டுமே! பிரதமர் மோடிக்கு அமெரிக்க தூதர் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை பண்பைப் பாராட்டி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவில் 5ஜி, 6ஜி, 7ஜி கிடையாது, குருஜி மட்டுமே இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

US Ambassador praises PM Modi, says No 5g, 6g only Guruji
Author
First Published May 23, 2023, 9:42 PM IST

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை பண்புக்காக அவரைப் பாராட்டி இருக்கிறார். மேலும், அவரது அற்புதமான கைகளில் இந்தியா உள்ளது என்றும் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பயிலரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய எரிக் கார்செட்டி இவ்வாறு பேசியுள்ளார்.

பொது மற்றும் தனியார் துறைகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள கொள்கைகளை எரிக் கார்செட்டி சிலாகித்துப் பேசியுள்ளார். இது நாட்டின் தற்போதைய வளர்ச்சியின் தெளிவான வரையறை என்றும் கூறி தெரிவித்துள்ளார்.

"இந்தியா மிகவும் அற்புதமான கரங்களில் உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகறை மாற்றி அமைக்கும் கொள்கைகளால் இந்தியா தற்போது எழுச்சி பெற்றுள்ளது. இதுவே இந்தியாவின் வளர்ச்சியைக் காட்டுகிறது" என அவர் குறிப்பிட்டார்.

ஜிடிபி 3.5 ட்ரில்லியன் டாலரை தாண்டினாலும், இந்தியாவுக்கு ஒரு அபாயம் இருக்கு! மூடிஸ் அறிக்கையில் தகவல்

5G தொழில்நுட்பம் அமெரிக்காவின் முக்கிய அங்கம் என்று தெரிவித்த கார்செட்டி, இந்தியா எதிர்காலத்தில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பேசிய எரிக், "திறந்த, அணுகக்கூடிய மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்ப சூழலை வளர்ப்பதற்கு, இரு நாடுகளும் எடுக்கும் முடிவுகள் ஊக்கமளிப்பதை உறுதி செய்ய வேண்டும்." என வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22ஆம் தேதி முதல் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார். அது குறித்தும் பேசிய எரிக் கார்செட்டி, "எங்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அடுத்த மாதம் வாஷிங்டன், டி.சி.க்கு பிரதம மந்திரியின் வருகைக்கான ஆயத்தப் பணிகளைச் செய்து வருகிறார். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை அமெரிக்க கையாண்டு வருகிறது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை இணைக்கும் வகையில் தொழில்நுட்பம் செயல்படுகிறது. குறிப்பாக 5ஜி தொழில்நுட்பம் அமெரிக்காவின் முதுகெலும்பாக விளங்குகிறது" என்றார்.

இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் 2.6 பில்லியன் மக்களுக்கு இன்றும் உலகம் முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு கிடைக்காதது குறித்து கவலை தெரிவித்த எரிக் கார்செட்டி, "5ஜி மற்றும் 6ஜி சகாப்தத்தில், இதுபோன்ற நிலை நீடிக்க முடியாது. மேலும் இது தொழில்நுட்பம் எவ்வாறு மிகவும் மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் காட்டுகிறது" என்று கூறினார். ஆனால், "இந்தியாவில் 5ஜி, 6ஜி, 7ஜி எல்லாம் கிடையாது, குருஜி மட்டுமே இருக்கிறார்" என்று பிரதமர் மோடியைப் பாராட்டினார்.

மேற்கு வங்கத்தில் 34,000 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்; 100 பேர் கைது!

Follow Us:
Download App:
  • android
  • ios