ஜிடிபி 3.5 ட்ரில்லியன் டாலரை தாண்டினாலும், இந்தியாவுக்கு ஒரு அபாயம் இருக்கு! மூடிஸ் அறிக்கையில் தகவல்
அடுத்த சில ஆண்டுகளுக்கு வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட ஜி20 உறுப்பு நாடாக இந்தியா தொடரும் என மூடிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022 இல் 3.5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. மேலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட ஜி20 உறுப்பு நாடாகவும் தொடரும் என மூடிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் சீர்திருத்தம் மற்றும் கொள்கைத் தடைகள் முதலீட்டைத் தடுக்கலாம் என்றும் கணித்துள்ளது.
உரிமங்களைப் பெறுதல், வணிக ஒப்புதல் கிடைத்தல் போன்றவற்றுக்கான நடைமுறைகளில் சுணக்கம் காணப்படலாம் என்றும் அமெரிக்காச் சேர்ந்த பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற பிராந்தியத்தில் மற்ற வளரும் பொருளாதாரங்களுடன் போட்டியிடும் போது, இந்தியாவின் உயர் அதிகார மட்டத்தில் எடுக்கும் முடிவுகள் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதைக் குறைக்கலாம்." மூடிஸ் கூறியுள்ளது.
இந்தியாவில் 5G, 6G, 7G எதுவும் கிடையாது, குருஜி மட்டுமே! பிரதமர் மோடிக்கு அமெரிக்க தூதர் புகழாரம்
இளம் மற்றும் படித்த பணியாளர்கள், அதிகரித்து வரும் சிறு குடும்பங்கள் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை வீட்டுவசதி, சிமென்ட் மற்றும் புதிய கார்களுக்கான தேவையை அதிகரிக்கும் என மூடிஸ் அறிக்கை சொல்கிறது. அரசின் உள்கட்டமைப்பு செலவுகள் எஃகு மற்றும் சிமெண்ட் உற்பத்தியை மேம்படுத்தும்; அதே நேரத்தில் இந்தியாவின் நெட்-ஜீரோ அர்ப்பணிப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீட்டை ஊக்குவிக்கும் எனக் கூறப்படுகிறது.
"உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் உள்ள தேவை, கடந்த பத்தாண்டுகளாக ஆண்டுதோறும் 3-12 சதவிகிதம் வளர்ந்துவரும் வேளையில், 2030ஆம் ஆண்டளவில் இத்துறைகளில் இந்தியாவின் திறன் சீனாவை விட மிகவும் பின்தங்கியே இருக்கும்" என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தின் வலுவான ஆற்றல் இருந்தபோதிலும், வரையறுக்கப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் அல்லது மெதுவான கொள்கை அமலாக்கம் காரணமாக இந்தியாவின் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீட்டின் வேகம் குறையும் அபாயம் உள்ளது என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
மேற்கு வங்கத்தில் 34,000 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்; 100 பேர் கைது!
"நிலம் கையகப்படுத்துதல் ஒப்புதல்கள், ஒழுங்குமுறை அனுமதிகள், உரிமங்கள் பெறுதல் மற்றும் வணிகங்களை நிறுவுதல் ஆகியவற்றிற்கு தேவையான நேரத்தைப் பற்றிய உறுதியின்மை திட்டங்களை தாமதப்படுத்தும். மேலும், பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்தியாவின் தாராளமயமாக்கல் வெளிநாட்டு முதலீடுகளுக்குத் தடையாக இருக்கும்" என்றும் கூறப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் ஊழலைக் குறைப்பதற்கும், பொருளாதார நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கும், வரி வசூல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஊக்கமளிக்கின்றன.
தொற்றுநோய்களின் போது தொழிலாளர் சட்டங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பது, விவசாயத் துறையின் செயல்திறனை அதிகரிப்பது, உள்கட்டமைப்பில் முதலீட்டை விரிவுபடுத்துதல், உற்பத்தித் துறை முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் நிதித் துறையை வலுப்படுத்துதல் போன்ற கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்பட்டால், அதிக பொருளாதார வளர்ச்சியைப் பெறமுடியும் என மூடிஸ் அறிக்கை பரிந்துரைக்கிறது.
Aavin vs Amul: தமிழகத்தில் நுழையும் அமுல்! ஆவின் பால் விற்பனைக்கு ஆபத்தா?