சாக்லேட் சாப்பிட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்த 4 வயது குழந்தை.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்

Published : May 23, 2023, 10:14 PM IST
சாக்லேட் சாப்பிட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்த 4 வயது குழந்தை.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில் 4 வயது குழந்தை ஒன்று சாக்லேட் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் கிரேட் நொய்டாவில் அருகில் உள்ள கடையில் சாக்லேட் வாங்கி சாப்பிட்ட நான்கு வயது குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது. சாக்லேட் மூச்சுக்குழாயில் சிக்கியதால் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் இதயத்தை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்த சிறுவன் சன்யால் என அடையாளம் காணப்பட்டதாகவும், அச்சிறுவன் தனது தாத்தாவிடம் பணம் பெற்று சாக்லேட் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. சிறுவனின் தொண்டையில் சாக்லேட் சிக்கியதால், சரியான காற்றோட்டத்தை பராமரிக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன குழந்தையின் பெற்றோர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், சிறுவனின் உடல்நிலை வேகமாக மோசமடையத் தொடங்கியது.

இதையும் படிங்க : மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் மற்றொரு சிறுத்தை குட்டி உயிரிழப்பு.. என்ன காரணம்?

மேலும் மருத்துவமனைக்கு சென்ற உடன், பேச முடியாமல் தவித்த குழந்தை, இடைவிடாத அழுகையின் மூலம் தனது வலியை வெளிப்படுத்தியது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துவிட்டது. தங்களின் ஒரே குழந்தையை இழந்த பெற்றோர் சோகத்தில் மூழ்கினர். சாக்லேட் சாப்பிட்டதால் மூச்சுத்திணறி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ஷாக் நியூஸ்.. அமேசான் ஷாப்பிங் அடுத்த மாதம் முதல் விலை இருக்கும்.. ஏன் தெரியுமா?

PREV
click me!

Recommended Stories

சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?
சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி