நாட்டின் மிகப்பெரிய உயர் நீதிமன்றத்தை நாளை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
ஜார்க்கண்டில் 165 ஏக்கர் பரப்பளவில் புதிய உயர் நீதிமன்ற வளாகத்திற்கான டெண்டர் பிப்ரவரி 2015 இல் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் ஜூன் 2015 இல் தொடங்கியது.
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள துர்வாவில் புதுப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற வளாகம் பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய உயர் நீதிமன்றமாக உருவாகியுள்ளது. இதனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை திறந்து வைக்கிறார்.
165 ஏக்கர் பரப்பளவில் புதிய உயர் நீதிமன்ற வளாகத்திற்கான டெண்டர் பிப்ரவரி 2015 இல் வெளியிடப்பட்டது. கட்டுமானப் பணிகள் ஜூன் 2015 இல் தொடங்கியது. பணிகளை முடிக்க 30 மாத காலக்கெடு விதிக்கப்பட்டபோதும் நீண்டகால தாமதத்திற்குப் பிறகு, கட்டுமானப் பணிகள் முடிந்தன.
"பரப்பளவு அடிப்படையில், இது இந்தியாவின் மற்ற உயர் நீதிமன்றங்களைவிடப் பெரியது. உச்ச நீதிமன்றத்தை விடவும் 22 ஏக்கர் அளவுக்குப் பெரியது. 550 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 1,200 வழக்கறிஞர்கள் அமரும் வகையில் இரண்டு அரங்குகள், 540 அறைகள் கொண்ட சேம்பர் போன்ற பல வசதிகள் உள்ளன” என்று ஜார்க்கண்ட் கட்டுமானத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
திருப்பதிக்கு போக போறீங்களா? சிறப்பு தரிசனம் டிக்கெட் குறித்து வெளியான முக்கிய தகவல்..
இது 30,000 சதுர அடியில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் 2,000 வாகனங்களுக்கான பார்க்கிங் மற்றும் வழக்குகளை விசாரிக்க 25 பிரமாண்ட குளிரூட்டப்பட்ட நீதிமன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் நீதிபதிகள் மற்றும் பிற நீதித்துறை அதிகாரிகள் அமர்ந்து படிக்கும் வகையில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சட்டப் புத்தகங்கள் உள்ளன.
உயர் நீதிமன்ற கட்டிடத்தில் சுமார் 68 ஏக்கரில் மூன்று தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற பகுதி இரண்டு தளங்களைக் கொண்டது. இதில், தலைமை நீதிபதி நீதிமன்றம் உட்பட மொத்தம் 13 நீதிமன்றங்கள் முதல் தளத்திலும், மேலும் 12 நீதிமன்றங்கள் இரண்டாவது தளத்திலும் கட்டப்பட்டுள்ளன.
தட்டச்சர்களுக்கு தனி அறை உள்ளது. இதுதவிர, 70 போலீசார் தங்கும் அறைகளும் கட்டப்பட்டுள்ளன. அட்வகேட் ஜெனரல் அலுவலகம் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், 95 அரசு வழக்கறிஞர்களுக்கான அறையும் புதிய உயர் நீதிமன்றத்தில் இருக்கும்.
மோடியை தனது 'பாஸ்' என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் குறிப்பிடக் காரணம் என்ன?
இதுதவிர, 30 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய உயர் நீதிமன்றக் கட்டிடத்தின் மொத்தக் கட்டுமானப் பரப்பு சுமார் 68 ஏக்கர். இதில் வாகன நிறுத்துமிடம், நீதிமன்ற அறை, வழக்கறிஞர் கூடம், பதிவுக் கட்டிடம் மற்றும் இதர ஏற்பாடுகளும் உள்ளன.
வளாகத்தை பசுமையாக வைத்திருக்க மொத்தம் 4,436 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் ஒரு தபால் நிலையம், மருந்தகம், ரயில்வே முன்பதிவு கவுன்டர் மற்றும் குழந்தை காப்பகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. வளாகத்தில் சூரிய சக்தி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முழு வளாகமும் சுமார் 60 சதவீத அளவுக்கு சூரிய சக்தியில் இயங்கும். இதற்காக பார்க்கிங் ஏரியாவில் 2,000 KVA திறன் கொண்ட சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, 2,000 KV ஜெனரேட்டர்களும் நிறுவப்பட்டுள்ளன, இதில் 1,500 KV ஒரு மற்றும் 500-500 KV திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர்கள் உள்ளன.
"இந்த உயர் நீதிமன்றம் நாட்டிலேயே மிகப்பெரியது. ஜார்கண்ட் மக்களுக்கு பெருமை சேர்க்கிறது. இது வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுப்பவர்களுக்கும் சிறப்பாகப் பயன்படும்." என்று ஜார்க்கண்ட் மாநில பார் கவுன்சில் தலைவர் ராஜேந்திர கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்தார்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தாய் பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு.. ஆத்திரத்தில் மகள் செய்த காரியம்..!