எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தாய் பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு.. ஆத்திரத்தில் மகள் செய்த காரியம்..!
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பல ஆண்களுடன் தாய் கள்ளத்தொடர்பில் இருந்ததால் ஆத்திரத்தில் இதுபோன்று செய்ததாக மகள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி அருகே சேனம்பட்லா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்ட வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியது. திடீர் திடீரென வீடுகளில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்குள்ள கோவிலில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விளக்கேற்றி பரிகார பூஜை செய்தனர்.
Tirupati
அதற்கு பிறகும் பூட்டிய வீடுகள் தீ பிடித்து எரிந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அவ்வப்போது சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
illegal love
இறுதியில் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை பிடித்து போலீசார் அவரிடம் தீவிர நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. தாயின் நடத்தை சரியில்லாததால் அதே ஊரில் உள்ள சிலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார். எனக்கு இது பிடிக்கவில்லை. எனவே ஊரை காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு சென்று வசிக்கலாம் என்று என் தாயிடம் கூறினேன்.
அவர் கேட்கவில்லை. எனவே, எப்படியாவது வீட்டை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக முதலில் நாங்கள் வசிக்கும் வீட்டில் இருக்கும் பீரோவுக்கு தீ வைத்தேன். என் தாய்க்கு பயத்தை ஏற்படுத்த அவர் தூங்கி கொண்டிருந்தபோது சேலையில் தீ வைத்தேன். அப்போதும் என் தாய் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு செல்ல மறுத்துவிட்டார்.
எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் வசிக்கும் வீடுகள், அவர்களுடைய வைக்கோல் போர்கள் ஆகியவற்றிற்க்கு தீ வைத்தேன் என கூறினார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.