இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 01.06.2023

By Dinesh TGFirst Published Jun 1, 2023, 7:48 AM IST
Highlights

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 01.06.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.
 

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்துள்ளது. விலை குறைந்ததையடுத்து சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிலிண்டர் விலை

வரலாற்றின் அரிச்சுவடி தெரியாத அண்ணாமலை அரசியல் பரபரப்புக்காக பொத்தாம் பொதுவாக பேசுவதெல்லாம் நகைப்பிற்குரியது என செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

செல்வபெருந்தகை

திரையுலகில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், அதனை யாரும் வெளிப்படையாக பேசுவது இல்லை. பலர் இதுபோன்ற விஷயங்களை கண்டும் காணாமல் கடந்து செல்வதை வழக்கமாக வைத்துளள்னர். ஆனால் காதல் சுகுமார், நடிகைகளிடம் கேட்கப்படும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து படு ஓப்பனாக பேசியுள்ளார்.

காதல் சுகுமார்

குஜராத்தில் பிரிந்து சென்ற மனைவியை கணவரே கடத்திச் சென்று பொது இடத்தில் வைத்து, ஆடைகளைக் கழற்றி தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டார்.

பெண் மீது தாக்குதல்

சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

மு.க.ஸ்டாலின்

பூமியின் கிரெட்டேசியஸ் அடுக்கைக் குறிவைத்து சீனா 10 ஆயிரம் மீட்டர் ஆழ்துளையைப் போடும் பணியைத் தொடங்கி இருக்கிறது. இதைக் கொண்டு பூமியை ஆராயப் போகிறார்களாம்.

பூமியில் ஆழ்துளை போடும் சீனா

2022-23 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி புள்ளிவிவரங்கள் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் திறனைக் காட்டுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்

ஐந்து மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ் பார்முலா நாட்டையே திவால் ஆக்கிவிடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு

நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிடிபி உயர்வு

பிரதமர் மோடிக்கு கிடைத்து வரும் பாராட்டுகளை ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை… அனுராக் தாக்கூர் கருத்து!! மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அனுராக் தாக்கூர்

பிசிசிஐ ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மூலம் மட்டும் 48,390 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறது. ஆனால், எதற்கும் பிசிசிஐ வரி செலுத்துவதே கிடையாது.

ஐபிஎல் வருமானத்துக்கு வரி விலக்கு

சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 2 பேரை கைது செய்த காவல் துறையினர் தப்பிச் சென்ற ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாலியல் தொழில்

அண்மைக் காலமாக குஜராத், மகாராஷ்டிரா முதலிய மாநிலங்களில் கள்ள நோட்டு புழக்கம் தொடர்பாக பல வழக்குகளை பதிவு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சொல்கிறது.

கள்ளநோட்டுகள்

கா்நாடகத்தில் பாடநூல்கள் திருத்தி அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மதுபங்காரப்பா தெரிவித்துள்ளார்.

மதுபங்காரப்பா

முழங்கால் காயம் உள்பட பல காயங்கள் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார்.

தோனிக்கு அறுவை சிகிச்சை

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கழுத்தை அறுக்க முயற்சி செய்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

போலீஸ் மீது தாக்குதல்

மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவோம் என்ற கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்

நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சிங் மீது முன்வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்கத் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

பிரிஜ் பூஷன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவில் கடுமையாக விமர்சித்து இருப்பதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ராகுல் காந்தி

ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை கொள்ளாத உல்லாச பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

தென்னிந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஷ்வரன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளது புது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த்

மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? விளையாட்டு வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்றால் யாரை நம்புவார்கள் என்று தெரியவில்லை.

அண்ணாமலை

இயக்குனர் பேரரசு மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து அவருடன் கலந்துரையாடினர்.

அண்ணாமலையுடன் திரை பிரபலங்கள் சந்திப்பு

click me!