பாகிஸ்தான், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கள்ளநோட்டுகள்!
அண்மைக் காலமாக குஜராத், மகாராஷ்டிரா முதலிய மாநிலங்களில் கள்ள நோட்டு புழக்கம் தொடர்பாக பல வழக்குகளை பதிவு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சொல்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதிக மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் பழக்கத்தில் விடப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலங்களில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் கள்ள நோட்டுகள் தொடர்பாக பல வழக்குகளை பதிவு செய்துள்ளது.
2019 முதல், என்ஐஏ 26 கள்ளநோட்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது, அவற்றில் பெரும்பாலானவை பாகிஸ்தானுடன் தொடர்புடையவை. பறிமுதல் செய்யப்பட்ட கரன்சியின் மொத்த மதிப்பு ரூ.20.1 கோடியாகும். இதில் சுமார் 60-70% நோட்டுகள் 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
2019 முதல் 2022 வரை ஒவ்வொரு ஆண்டும் முறையே 14, 8, 2 மற்றும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ரூ. 2 கோடி, ரூ. 50 லட்சம், ரூ. 7.8 கோடி மற்றும் ரூ. 13 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பிடிப்பட்டன.
இந்தியாவில் கள்ள நோட்டுப் புழக்கம் பாகிஸ்தானில் இருந்து நுழைவதாக என்ஐஏ கண்டுபிடித்துள்ளது. இந்த கள்ள நோட்டுகளை இந்தியாவுக்கு அனுப்ப நேபாளம் மற்றும் பாகிஸ்தான் வழியான பாதை பயன்படுத்தப்படுகிறது. இந்த நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சிடப்பட்டதாவும் தெரியவந்திருக்கிறது. இந்திய ரூபாய் நோட்டுகளின் அம்சங்கள் பெரும்பாலும் அப்படியே உள்ளதால் சாமானியர்கள் கள்ள நோட்டுகளையும் அசல் நோட்டுகளையும் வேறுபடுத்திப் பார்ப்பது கடினம் என்றும் சொல்லப்படுகிறது.
"பாகிஸ்தானில் அச்சிடப்பட்டதால் மட்டுமே அவை சட்டப்பூர்வமாக செல்லுபடி ஆகக்கூடியவை அல்ல" என என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் ஐஎஸ்ஐ மற்றும் டி-கம்பெனி ஆகியவற்றின் பங்கு இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிக மதிப்புள்ள கரன்சிகளை மொத்தமாக இந்தியாவுக்குக் அனுப்புகிறார்கள். பின் இங்குள்ள அவர்களின் ஆட்கள் மூலம் அவற்றை ஒவ்வொரு நோட்டாக புழக்கத்தில் விடுகிறார்கள் என்றும் என்ஐஏ கண்டறிந்துள்ளது.
கள்ள நோட்டுகள் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டவுடன், இங்குள்ள அவர்களின் ஆட்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்த விசாரணையில், வெளிநாட்டில் இருக்கும் 'மாமா' (uncle) என்று அழைக்கப்படும் குறிப்பிடப்படும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்தான் கள்ள நோட்டுகளை இந்தியாவுக்கு அனுப்புகிறார் என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்குள் வந்ததும் இங்குள்ள நபரிடம் ரூ.1.80 லட்சம் அசல் இந்திய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு ரூ.3 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறார்கள்.
இத்தகைய வழக்கு முதலில் மும்பையின் நௌபாடா காவல் நிலையத்தில் 2021 இல் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில், நகரின் ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கூர்மையான ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தானே குற்றப்பிரிவு போலீசார் நவம்பர் 17, 2021 அன்று கணேஷ் திரையரங்கம் அருகே கள்ள நோட்டுகளை பரப்பும் ரியாஸ் அப்துல் ரஹிமான் ஷிகில்கர் என்பவருக்கு வலை விரித்தனர். அவர் கைது செய்யப்பட்டபோது, ரூ.2.99 லட்சம் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய இரண்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் கள்ள நோட்டுகளைப் பெற வாட்ஸ்அப் மூலம் மலேசியாவில் உள்ள நபருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் மீது கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை: டெல்லி போலீஸ்