காங்கிரஸ் பார்முலா நாட்டையே திவால் ஆக்கிவிடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
ஐந்து மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்துப் பேசியுள்ளார்.
ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காங்கிரஸை கேலி செய்து பேசி இருக்கிறார். மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஸ்திரத்தன்மை மற்றும் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் அளிக்கும் வாக்குறுதிகள் குறித்து பிரதமர் மோடி கேள்விகளை எழுப்பினார்.
அஜ்மீர் மற்றும் புஷ்கருக்கு சென்ற பிரதமர் மோடி, ராஜஸ்தான் அரசில் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சாடினார். கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸின் ஐந்து தேர்தல் வாக்கறுதிகளைக் குறிப்பிட்டுப் பேசிய மோடி, "காங்கிரஸிடம் புதிய வாக்குறுதி பார்முலா உள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா? அவர்கள் கொடுக்கும் உத்தரவாதகள் நாட்டையே திவாலாக்கிவிடும்" என்று தெரிவித்தார்.
கோடிகள் புரளும் ஐபிஎல் வருமானத்துக்கு வரி விலக்கு! ஏன் தெரியுமா?
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் செயல்படும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் இலவச மின்சாரம், குறைந்த விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் என வசமூக நலத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.
இந்நிலையில், இன்று காங்கிரஸைத் தாக்கிப் பேசிய பிரதமர், "ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, வறுமையை அகற்றுவோம் என்று காங்கிரஸ் உத்தரவாதம் அளித்தது. ஆனால் அது ஏழைகளுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாக மாறியது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஏழைகளை தவறாக வழிநடத்துவதும், பிறகு பின்வாங்குவதும் காங்கிரஸின் கொள்கையாக உள்ளது. இதனால் ராஜஸ்தான் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்... ராஜஸ்தானுக்கு என்ன தான் கிடைத்திருக்கிறது? முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லோரும் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றனர்" என்றார்.
பாகிஸ்தான், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கள்ளநோட்டுகள்!
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் இளம் தலைவர் சச்சின் பைலட் இடையே நடக்கும் மோதல் போக்கு பிரதமரின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு கட்சி மேலிடம் இருவருக்கும் இடையில் சமரசம் செய்துவைக்க முயலும் நிலையில், சச்சின் பைலட் தனது சொந்தக் கட்சியை நோக்கி மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.
முந்தைய வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அசோக் கெலாட் அரசு நடவடிக்கை எடுக்க தனது இறுதி எச்சரிக்கையைப் பதிவு செய்திருக்கிறா். "ஊழல் மற்றும் நீதி விஷயத்தில், எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை" என சச்சின் பைலட் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டு பிரதமர் மோடி நான்காவது முறையாக அங்கு சென்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
2 மணிநேரம் கதறி அழுதேன்! வேலையை இழந்ததால் குமுறும் மெட்டா நிறுவன ஊழியர்