நம்பிக்கைக்குரிய பாதையில் இந்தியப் பொருளாதாரம்! ஜிடிபி வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

By SG Balan  |  First Published May 31, 2023, 9:10 PM IST

2022-23 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி புள்ளிவிவரங்கள் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் திறனைக் காட்டுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2022-23 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி புள்ளிவிவரங்கள் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் திறனை காட்டுவதாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார குறியீடுகள் நமது பொருளாதாரத்தின் நம்பிக்கைக்குரிய பாதையை வடிவமைப்பதாக உள்ளன எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது, நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி முந்தைய இரண்டு காலாண்டுகளில் சரிவுக்குப் பிறகு உயர்வு அடைந்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் ஜிடிபி 4.5 சதவீதம் வளர்ச்சி கண்டது. நான்காவது காலாண்டு மதிப்பீடு, முந்தைய ஆண்டின் இதே கட்டத்தில் அடைந்த வளர்ச்சியைவிட 4 சதவீதம்அதிகமாக உள்ளது.

பாகிஸ்தான், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கள்ளநோட்டுகள்!

The 2022-23 GDP growth figures underscore the resilience of the Indian economy amidst global challenges. This robust performance along with overall optimism and compelling macro-economic indicators, exemplify the promising trajectory of our economy and the tenacity of our people.

— Narendra Modi (@narendramodi)

2022-23 நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த மதிப்பீடு முந்தைய ஆண்டின் 9.1 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் குறைவாக உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி 2022-23 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியை 7 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், ஜிடிபி வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியிருந்தார்.

வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறைகள் 14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கோடிகள் புரளும் ஐபிஎல் வருமானத்துக்கு வரி விலக்கு! ஏன் தெரியுமா?

சமீபத்திய ஆய்வு அறிக்கையில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கூறியுள்ளது.

இந்தியாவில் நகரமயமாக்கல் வீட்டுகள் மற்றும் கார்களுக்கான தேவையை அதிகரிக்கும். அதே வேளையில், அரசாங்க உள்கட்டமைப்பு செலவுகள் எஃகு மற்றும் சிமெண்டிற்கான தேவையை தூண்டும் என மூடிஸ் அறிக்கை சொல்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடுகள் அதிகரிக்கும் எனவும் கணிக்கிறது.

4வது காலாண்டில் ஜிடிபி 6.1% உயர்வு; பொருளாதார வளர்ச்சி 7.2%

click me!