பொதுவெளியில் பெண்ணின் ஆடைகளைக் கழற்றி கண்டபடி தாக்கிய முன்னாள் கணவர்; கைகட்டி வேடிக்கை பார்த்த ஊர்மக்கள்

குஜராத்தில் பிரிந்து சென்ற மனைவியை கணவரே கடத்திச் சென்று பொது இடத்தில் வைத்து, ஆடைகளைக் கழற்றி தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டார்.

Gujarat Woman Stripped Naked, Thrashed; Ex Husband Among 4 Arrested: Cops

குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டத்தில் ஒரு பெண்ணை அவரது முன்னாள் கணவர் உட்பட சிலர் பொது வெளியில் வைத்து கழற்றி, மோசமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் முன்னாள் கணவர் உள்ளிட்ட நால்வரை போலீசார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சென்ற மே 28ஆம் தேதி நடந்துள்ளது. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையான நிகழ்வின் வீடியோ புதன்கிழமை சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு, குஜராத் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கோடிகள் புரளும் ஐபிஎல் வருமானத்துக்கு வரி விலக்கு! ஏன் தெரியுமா?

Gujarat Woman Stripped Naked, Thrashed; Ex Husband Among 4 Arrested: Cops

பாதிக்கப்பட்ட பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவர் மற்றும் நான்கு குழந்தைகளிடம் இருந்து பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்திருந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த கணவர் மேலும் இருவருடன் சேர்ந்து ராம்புரா கிராமத்தில் இருந்து கடத்தி, மார்கலா கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குதான் சம்பவம் நடந்ததாக சுக்சார் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

"பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாழ்வதை நிறுத்திவிட்டு, மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள சனாஸ்மாவில் வேறொருவருடன் வசித்து வந்தார். அங்கு அவர்கள் தினக்கூலியாகப் பணிபுரிந்தனர். அந்த நபரின் தாயார் அவர்களை ராம்புரா கிராமத்தில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள அழைத்திருக்கிறார்.  உடன் அந்தப் பெண் விட்டுவிட்டுவந்த முன்னாள் கணவரையும் அழைத்திருக்கிறார்." எனப் போலீசார் விசாரணையில் தெரிந்திருக்கிறது.

ரஷ்யாவுக்குப் போட்டியாக பூமியில் 32,808 அடிக்கு ஆழ்துளை போடும் சீனா! எதுக்குன்னு தெரியுமா?

மேலும், "ராம்புராவுக்கு ஒரு கும்பலுடன் காரில் வந்த முன்னாள் கணவர் அந்தப் பெண்ணையும் உடன் இருந்த காதலரையும் கடத்தி மார்கலா கிராமத்திற்குச் போயிருக்கிறார். அங்கு பொது இடத்தில் வைத்து, அனைவர் முன்னிலையிலும் பெண்ணின் ஆடைகளைக் கழற்றி தாக்கியுள்ளனர்" என காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மொபைலில் பதிவுசெய்து வெளியிட்டுவிட்டார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் இச்சம்பவம் காவல்துறை பார்வைக்கு எட்டியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் சொல்கின்றனர்.

ரூ.3233 கோடி முதலீடுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! சென்னையில் கெத்தாக அறிவித்த் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios