Asianet News TamilAsianet News Tamil

தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் திமுக.. ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் இபிஎஸ்..!

ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை கொள்ளாத, உல்லாச பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர்.

DMK regime presents a new issue to the people every day.. Edappadi palanisamy
Author
First Published May 31, 2023, 2:58 PM IST

ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை கொள்ளாத உல்லாச பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் இந்த விடியா ஆட்சியில், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் போக்குவரத்து கழக ஊழியர்கள் குறிப்பாக திமுகவின் தொமுச-வினர் அறிவிக்கப்படாத திடீர் போராட்டத்தை நடத்தினர்.

இதையும் படிங்க;- ஸ்டாலின் மதுரைக்கு செய்த துரோகம்! பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்து மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க!அண்ணாமலை.!

DMK regime presents a new issue to the people every day.. Edappadi palanisamy

அதிலிருந்து மீள்வதற்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவில் வழங்கபடாதால், இன்று மெட்ரோ குடிநீர் லாரிகளை இயக்குவோர் திடீர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சியில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதும், இனி அடுத்தடுத்து என்ன போராட்டங்கள் வருமோ என்கிற அச்ச உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதும் மிகுந்த வேதனைக்குரியது. 

DMK regime presents a new issue to the people every day.. Edappadi palanisamy

ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை கொள்ளாத, உல்லாச பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர், இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளையாவது நிறைவு செய்ய வேண்டிய நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- அதிரடி காட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்.! நாளை முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார்? என்ன காரணம் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios