BJP MP Nishikant Dubey : ஓடிடி தளங்களில் ஆபாசம் மற்றும் ஆபாச கருத்துக்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
BJP MP Nishikant Dubey : நாளுக்கு நாள் ஆபாசம் மற்றும் ஆபாசம் தொடர்பான கருத்துக்கள் பகிரப்படுவது என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இப்போது நாடாளுமன்ற குழு ஓடிடி தளங்களில் ஆபாசம் மற்றும் ஆபாச கருத்துக்கள் பகிர்வதற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற குழு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான சட்டங்களை வரைவு செய்ய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மானியக் கோரிக்கைகள் குறித்த அறிக்கையில் ஆபாசம் மற்றும் ஆபாச கருத்துக்கள் பகிர்வதற்கும் வெளியிடும் 18 ஓடிடி தளங்களை தடுப்பது குறித்து அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஏற்கனவே 19 வெப்சைட்ஸ், 10 ஆப்ஸ் உள்பட 57 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நாடாளுமன்ற குழுவிடம் கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்த குழு முடக்கப்பட்ட 18 ஓடிடி தளங்கள், 19 வெப்சைட்ஸ் மற்றும் 10 ஆப்ஸ் உள்ளிட்ட 57 சோஷியல் மீடியா கணக்குகள் தவிர மற்ற ஊடக தளங்களிலோ அல்லது ஓடிடி தளத்திலோ ஆபாச காட்சிகள் எளிதாக கிடைக்குமா? அப்படி எளிதாக கிடைத்தால் அதனை தடுப்பதற்கான திட்டத்தை வழங்க வேண்டுமா என்பது குறித்து கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு இப்போதுள்ள சட்டங்கள் போதுமானதா அல்லது கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமா என்பது குறித்தும் கேட்டது. அதோடு ஆபாச காட்சிகள் மற்றும் ஆபாச கருத்துக்களை பகிரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து ஐபி முகவரிகளை திரும்ப திரும்ப மாற்றி அதே தவறுகளை செய்து வரும் ஓடிடி தளங்களுக்கு எதிராக அரசு கடுமையாக செயல்படுகிறதா என்பதை நாடாளுமன்ற குழு அறிந்து கொள்ள விரும்புவதாக அமைச்சகத்திடம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.