Manoj Bharathiraja last rites Details in Tamil : மனோஜ் பாரதிராஜாவின் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது அப்பாவும் இயக்குநருமான பாரதிராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு சினிமா மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள கேசரினா டிரைவில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட இருக்கிறது. அதோடு, நாளை மாலை 4.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
Manoj Bharathiraja
தாஜ்மஹால் படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்தார். அவருக்கு வயது 48. சில நாட்களுக்கு முன்பு தான் அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டிலிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
Bharathiraja Son Manoj Bharathiraja Died at His 48 Age
தற்போது சேத்துப்பட்டில் உள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலானது சென்னை நீலாங்கரையில் உள்ள பாதிராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சினிமா மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை மாலை 4.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
48 வயதில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதி ராஜாவின் மனைவி மற்றும் மகள்களை பார்த்திருக்கீங்களா?
Manoj Bharathiraja Family
மனோஜ் பாரதிராஜா மற்றும் நந்தனா தம்பதியினருக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதனி என்று 2 மகள்கள் இருக்கின்றனர். மனோஜ் பாரதியின் மறைவுக்கு சினிமா மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கமல் ஹாசன், இசைஞானி இளையராஜா, சரத்குமார், வெங்கட் பிரபு, குஷ்பு என்று சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு பாரதிராஜாவிற்காக பலரும் வருத்தப்பட்டும் பேசியிருக்கின்றனர். அப்பா இருக்கும் போது மகனுக்கு இப்படியொரு நிலையா? என்று பிரபலங்கள் பலரும் வேதனை அடைந்துள்ளனர்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மறைவு – சினிமா, அரசியல் பிரபலங்கள் இரங்கல்!