MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எந்த அப்பாவுக்கும் இப்படியொரு நிலைமை வரக் கூடாது – மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு சூரி இரங்கல்!

எந்த அப்பாவுக்கும் இப்படியொரு நிலைமை வரக் கூடாது – மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு சூரி இரங்கல்!

Manoj Bharathiraja Died Soori Condolence Message : எந்த அப்பாவுக்கும் இந்த நிலைமை வரக் கூடாது என்று கூறிய நடிகர் சூரி, நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

2 Min read
Rsiva kumar
Published : Mar 25 2025, 11:11 PM IST| Updated : Mar 25 2025, 11:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

Manoj Bharathiraja Died Soori Condolence Message : நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது அப்பா இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தாஜ்மஹால் படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்திலேயே பின்னணி பாடலும் பாடியிருக்கிறார்.

27
Manoj Bharathiraja Died at his 48 age

Manoj Bharathiraja Died at his 48 age

இந்தப் படத்திற்கு கிடைத்த வ்ரவேற்புக்கு பிறகு சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம், சாதூரியன், ஈஸ்வரன், மாநாடு, விருமன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நீண்ட நாள் தோழியான நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

37
Manoj Bharathiraja dies due to cardiac arrest

Manoj Bharathiraja dies due to cardiac arrest

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் மனோஜ் பாரதிராஜா இன்று இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்தார். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

47
Manoj Bharathiraja Family

Manoj Bharathiraja Family

மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜா, சரத்குமார், நாசர், டி ராஜேந்தர், குஷ்பு, வெங்கட் பிரபு ஆகியோர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி, சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.

57
Manoj Bharathi, Manoj Bharathiraja Movies

Manoj Bharathi, Manoj Bharathiraja Movies

இந்த நிலையில் தான் விருமன் படத்தில் மனோஜ் பாரதிராஜா உடன் இணைந்து நடித்த நடிகர் சூரி தொலைபேசி வாயிலாக தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் எந்தவொரு அப்பாவிற்கு இப்படியொரு நிலைமை வரக் கூடாது. அப்பா இருக்கும் மகனுக்கு இப்படியொரு நிலையா? இறப்பதற்கான வயதா இது? வாழ வேண்டிய வயது. இப்படியெல்லாம் நடக்குமா என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

67
Manoj Bharathiraja Passed Away

Manoj Bharathiraja Passed Away

அவருடைய தாஜ்மஹால் படத்தில் நான் கலை வடிவமைப்பில் பணியாற்றியிருக்கிறேன். அவருடன் விருமன் படத்தில் நடித்திருக்கிறேன். எளிமையான மனிதர். எப்போதும் அமைதியாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

77
Manoj Bharathiraja dies due to cardiac arrest

Manoj Bharathiraja dies due to cardiac arrest

சூரியைத் தொடர்ந்து சேரனும் இதே கருத்துக்களைத் தான் கூறியிருக்கிறார். இயக்குநர் பாரதிராஜாவை நினைக்கும் போது தான் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இதே போன்று ஸ்ரீகாந்தும், யாருமே இப்படியொரு நிலைமை வரவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். அப்பா இருக்கும் போது மகன் இறப்பது நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று கூறி தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாரதியார்
மனோஜ் பாரதிராஜா காலமானார்
மனோஜ் பாரதிராஜா திரைப்படங்கள்
மனோஜ் பாரதிராஜா
சூரி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved