48 வயதில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதி ராஜாவின் மனைவி மற்றும் மகள்களை பார்த்திருக்கீங்களா?
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர், பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர், பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்தவர், இயக்குனர் இமையம் என கொண்டாடப்படும் பாரதி ராஜா அவர்கள். '16 வயதினிலே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அதை தொடர்ந்து, 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்', 'புதிய வார்ப்புகள்', 'நிறம் மாறாத பூக்கள்', 'கல்லுக்குள் ஈரம்', 'அலைகள் ஓய்வதில்லை', 'டிக் டிக் டிக்' போன்ற பல படங்களை இயக்கினார்.
தமிழ் சினிமாவில், பல முன்னணி ஹீரோக்களையும், ஹீரோயின்களையும் உருவாக்கி உள்ள பாரதி ராஜாவின் மகன், ஒரு இயக்குனராக மாறுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். காரணம் தமிழ் சினிமாவில் உள்ள சில முக்கிய இயக்குனர்களிடம், துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, 1999 ஆம் ஆண்டு தன்னுடைய தந்தை பாரதி ராஜாஇயக்கத்திலேயே 'தாஜ் மஹால்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
மனோஜ் பாரதிராஜா, ஹீரோவாக அறிமுகமான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், மனோஜுக்கு நல்ல அறிமுகத்தை பெற்று தந்தது. இதை தொடர்ந்து... கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க முடியாமல் போன நிலையில், குணச்சித்திர நடிகராக மாறினார். நடிகர் என்பதை தாண்டி, கடந்த ஆண்டு வெளியான 'மார்கழி திங்கள்' என்கிற படத்தையும் இயக்கி இருந்தார். புதுமுக நடிகர் - நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர். கிராமத்து காதலையும், அங்குள்ள சமூக பிரச்சனை பற்றியும் இந்த படம் பேசியது.
மனோஜ் பாரதி ராஜா சாதுரியன் என்கிற படத்தில் நடிக்கும் போது, தனக்கு ஜோடியாக நடித்த நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு தற்போது மதிவதனி, அர்த்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மனோஜ் பாரதி ராஜாவின் மூத்த மகள் இயக்குனராக வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் நிலையில் இளைய மகள் படித்து வருகிறார். 48 வயதாகும் மனோஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதயத்தில் இருந்த பிரச்சனை காரணமாக ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்திருந்தார்.
மனோஜ் பாரதிராஜா இயக்கும் மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்!
இதை தொடந்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்த நிலையில், இவருக்கு திடீர் என இன்று மாலை 6 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனோஜ் பாரதிராஜா, மறைவை தொடந்து இவர் தன்னுடைய காதல் மனைவி நந்தனாவை மற்றும் இரு மகள்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.