Breaking News: இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழப்பு!
Bharathiraja Son Manoj Bharathi Passed Away: இயக்கும்நரும், நடிகருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bharathiraja Son Manoj Bharathi Passed Away: இயக்கும்நரும், நடிகருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bharathiraja Son Manoj Passed Away: இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் பாரதிராஜா. சினிமாவில் எத்தனையோ படங்களை இயக்கியுள்ளார். இவரது மகன் மனோஜ் பாரதியும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தாஜ்மஹால் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான மனோஜ் சமுத்திரம், கடல் பூக்கள், பல்லவன், மாநாடு, விருமன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
48 வயதில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதி ராஜாவின் மனைவி மற்றும் மகள்களை பார்த்திருக்கீங்களா?
இந்த நிலையில் தான் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக மட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தனது அப்பா பாரதிராஜாவையும் நடிக்க வைத்துள்ளார். அதோடு பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார். ஆம், தான் ஹீரோவாக அறிமுகமான தாஜ்மஹால் படத்தில் இடம் பெற்ற ஈச்சி எலுமிச்சி என்ற பாடலையும் பாடியுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக உதவி இயக்குநராக இருந்துள்ளார். அதோடு தனது அப்பா இயக்கிய Final Cut of Director என்ற பாலிவுட் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மேலும், பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பலர் நடித்த எந்திரன் படத்திற்கு உதவி இயக்குநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மனோஜ் தனது நீண்ட கால தோழியான நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கேரளாவின் கோழிக்கோட்டில் தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. இது நந்தனாவின் சொந்த ஊர் என்பதால் அங்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மனோஜ் மற்றும் நந்தனா தம்பதியினருக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதானி என்று 2 மகள்கள் இருக்கின்றனர்.
நந்தனா ABCD மற்றும் Success போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், சாதுரியன் படத்தில் மனோஜ் உடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்துள்ளார்.
திரும்ப திரும்ப ரிலீஸ் - 1000 நாட்களை கடந்து ஓடிய மாஸ் ஹீரோவின் படம் எது தெரியுமா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இதய ஆபரேஷன் நடந்துள்ளது. சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்த நிலையில் தான் சற்று முன்னதாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48 தான் ஆகிறது.
Sonali Sood : விபத்தில் சிக்கிய சோனு சூட் மனைவி கவலைக்கிடம்? நடிகரின் உருக்கமான தகவல்!
மனோஜின் உயிரிழப்பு சினிமா பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரப்பரையும் ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.