Manoj Bharathiraja Died Soori Condolence Message : நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது அப்பா இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தாஜ்மஹால் படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்திலேயே பின்னணி பாடலும் பாடியிருக்கிறார்.
Manoj Bharathiraja Died at his 48 age
இந்தப் படத்திற்கு கிடைத்த வ்ரவேற்புக்கு பிறகு சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம், சாதூரியன், ஈஸ்வரன், மாநாடு, விருமன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நீண்ட நாள் தோழியான நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Manoj Bharathiraja dies due to cardiac arrest
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் மனோஜ் பாரதிராஜா இன்று இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்தார். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Manoj Bharathiraja Family
மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜா, சரத்குமார், நாசர், டி ராஜேந்தர், குஷ்பு, வெங்கட் பிரபு ஆகியோர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி, சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Manoj Bharathi, Manoj Bharathiraja Movies
இந்த நிலையில் தான் விருமன் படத்தில் மனோஜ் பாரதிராஜா உடன் இணைந்து நடித்த நடிகர் சூரி தொலைபேசி வாயிலாக தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் எந்தவொரு அப்பாவிற்கு இப்படியொரு நிலைமை வரக் கூடாது. அப்பா இருக்கும் மகனுக்கு இப்படியொரு நிலையா? இறப்பதற்கான வயதா இது? வாழ வேண்டிய வயது. இப்படியெல்லாம் நடக்குமா என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
Manoj Bharathiraja Passed Away
அவருடைய தாஜ்மஹால் படத்தில் நான் கலை வடிவமைப்பில் பணியாற்றியிருக்கிறேன். அவருடன் விருமன் படத்தில் நடித்திருக்கிறேன். எளிமையான மனிதர். எப்போதும் அமைதியாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
Manoj Bharathiraja dies due to cardiac arrest
சூரியைத் தொடர்ந்து சேரனும் இதே கருத்துக்களைத் தான் கூறியிருக்கிறார். இயக்குநர் பாரதிராஜாவை நினைக்கும் போது தான் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இதே போன்று ஸ்ரீகாந்தும், யாருமே இப்படியொரு நிலைமை வரவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். அப்பா இருக்கும் போது மகன் இறப்பது நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று கூறி தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.