கல்லூரிகளில் ராகிங் கொடுமை அதிகரித்து வருவது குறித்து சேவ் அமைப்பு அதிர்ச்சிகரமான டேட்டாவை வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Raging atrocities: 51 students killed in 3 years - Shocking information: அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற முன்னணி நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தியா வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தில், கல்வியில் உலக நாடுகளுக்கு முன்னிலையில் உள்ளது. என்னதான் நமது நாட்டில் கல்வியின் தரம் உயர்ந்தாலும் கல்லூரி, பல்கலைக்கழங்களில் இன்னும் ராகிங் கொடுமை குறைந்தபாடில்லை. ராகிங் கொடுமையால் மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.
கல்லுரி, பல்கலைக்கழங்களில் ராகிங் கொடுமை
இந்நிலையில், இந்தியாவில் ராகிங் கொடுமையால் கடந்த 3 ஆண்டுகளில் 51 மாணவர்கள் உயிழந்துள்ளதாக வெளியான தகவல அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்விச் சமூகத்துக்கு எதிரான வன்முறை (சேவ்) என்ற அமைப்பு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ராகிங் கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
3 ஆயிரத்து 156 புகார்கள் பதிவு
தேசிய அளவில் ராகிக் கொடுமைக்கு எதிரான உதவி எண்ணில் 3 ஆயிரத்து 156 புகார்கள் பதிவாகி உள்ளதாகவும் 1,946 கல்லூரிகள் இந்த புகார்களில் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் சேவ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரில் தொடர்புடைய கல்லுரிகள் பெரும்பாலானவை பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டாப் 10 தேசிய நெடுஞ்சாலைகள்! பயணப் பிரியர்கள் நோட் பண்ணிக்கோங்க!
3 ஆண்டுகளில் 51 பேர் உயிரிழப்பு
'ராகிங் கொடுமையில் மருத்துவ கல்லுரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு மட்டும் சுமார் 38.6% ராகிங் கொடுமைகள் நடந்துள்ளன. இதில் 35.4% புகர்கள் மிகவும் தீவிரமானதாகும். 45.1% ராகிங் தொடர்பான இறப்புகள் பதிவாகி உள்ளன. இதில் 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை மட்டும் 1.1% ஆகும். இந்த காலக்கட்டத்தில் ராகிங் காரணமாக 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன, இது கோட்டாவில் பதிவான 57 மாணவர் தற்கொலைகளுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது" கல்விச் சமூகத்துக்கு எதிரான வன்முறை அமைப்பு தெரிவித்துள்ளது.
புகார்களின் எண்ணிக்கை மிக அதிகம்
இருப்பினும், அறிக்கையில் கொடுக்கப்பட்டதை விட புகார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறினர். ''முழு இந்தியாவும் 3 ஆண்டுகளில் 3,156 ராகிங் புகார்களை மட்டுமே பதிவு செய்ததாகக் கூற முடியாது, இவை தேசிய ராகிங் எதிர்ப்பு ஹெல்ப்லைனில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் மட்டுமே. கல்லூரிகளுக்கு நேரடியாகவும், வழக்கு தீவிரமாக இருந்தால் நேரடியாக காவல்துறைக்கும் ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
தைரியமாக புகார் அளிக்க வேண்டும்
"இதுபோன்ற அனைத்து வழக்குகளும் ராகிங் எதிர்ப்பு உதவி எண்ணில் கிடைக்கும் எண்ணிக்கையில் பிரதிபலிக்கத் தவறிவிடுகின்றன, அதனால்தான் இந்த அறிக்கையில். எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி நிறுவனங்களில் கடுமையான ராகிங் சம்பவங்கள் இன்னும் அதிகமாக இருக்கும், ஏனெனில் பொதுவாக ஒரு சிறிய எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தைரியமாக முன்வந்து புகாரளிக்கிறார்கள், மற்றவர்கள் எந்தவொரு புகாரையும் அளித்த பிறகு தங்கள் பாதுகாப்பு குறித்த பயத்தில் அமைதியாக அவதிப்படுகிறார்கள்" என்றும் சேவ் அமைப்பு தெரித்துள்ளது.
பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்
"கல்லூரிகள் அர்ப்பணிப்புள்ள பாதுகாப்புக் காவலர்களுடன் கூடிய ராகிங் எதிர்ப்புப் படைகளை நிறுவ வேண்டும், அவர்களின் தொடர்பு விவரங்கள் புதியவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். விடுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பை பாதுகாப்புப் பணியாளர்கள், ராகிங் எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் பெற்றோர்கள் கூட கண்காணிக்க வேண்டும்" என்றும் சேவ் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த AI பூங்கா! என்னென்ன இருக்கு பாருங்க!