நீண்ட நேர உடலுறவு.. அதற்கென்று மாத்திரைகள் உட்கொள்வது சரியா? மருத்துவர்கள் தரும் ஆலோசனை என்ன?

By Asianet Tamil  |  First Published Sep 2, 2023, 11:33 PM IST

உடலுறவை பொருத்தவரை அதை அதிக நேரம் அனுபவிக்க ஆண்களும் சரி, பெண்களும் சரி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் பிரத்தியேகமான மாத்திரைகளை உட்கொள்வது, இது சரியா? தவறா?


ஒரு நல்ல உடல் உறவு என்பது மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு வியாதிகளை போக்கக்கூடியது. குறிப்பாக வேகமாக நகர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகத்தில், மனிதர்களுக்கு ஏற்படும் மன சோர்வையும், அழுத்தத்தையும் குறைக்க பெரிய அளவில் உதவுகிறது இந்த உடலுறவு. கணவனும், மனைவியும் இணைந்து தனிமையில் அமர்ந்து பல விஷயங்களை பேசி, போர் பிளேவில் ஈடுபட்டு அதன் பிறகு அவர்கள் வைத்துக் கொள்ளும் தாம்பத்தியம் என்பது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல நன்மைகளை தருகிறது. 

அடிக்கடி ஒரு நல்ல உடலுறவு வைத்துக் கொள்ளும் கணவன் மனைவிக்கு இருதயம் சம்பந்தமான நோய்கள் குறைவாகவே வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஒரு புறம் இருக்க உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபட வேண்டும் என்று நினைக்கும் சில தம்பதிகள் வயாகரா போன்ற சில மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டலால் அவதிபடுறீங்களா? இவற்றை மட்டும் சாப்பிடுங்க..இனி வராது..!!

அது சரியா? தவறா? என்று கேட்டால் மருத்துவர்கள் சொல்லும் ஒரே பதில், அதற்கான அவசியம் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும் என்பதுதான். சந்தையில் மலிவாக கிடைக்கிறது, அதிக வீரியம் தரும் என்று போலியாக பரப்பப்படும் செய்திகளை நம்பி இது போன்ற மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், ஒரு கணவனும் மனைவியும் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தால் முதலில் அது குறித்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அவர்கள் தரும் மாத்திரைகளை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தி இன்பம் பெறலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

அதேபோல இவ்வகை மாத்திரைகளை உட்கொள்ளும் பொழுது தலைவலி, குமட்டல் மற்றும் மூக்கடைப்பு போன்ற சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே அதிக நேரம் உடலுறவுகொள்ள விரும்பும் தம்பதிகள் இது போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு மாறாக சத்து நிறைந்த உணவுகளையும் பழங்களையும் உண்ணுவது சிறந்தது. 

ஆனால் அதை மீறி மாத்திரைகளை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை வரும் பொழுது 100% அது குறித்த நிபுணர்களிடம் கலந்தாலோசித்து மாத்திரைகளை உட்கொள்வதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆண்கள் தங்கள் வலியை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்... பார்த்திருக்கிறீர்களா...அது ஏன் தெரியுமா??

click me!