இனி கஷ்டமே வேண்டாம்...சட்டென சப்பாத்தி செய்து முடித்து விடலாம்

சப்பாத்திக்கு மாவு பக்குவமாக பிசைந்து, அதை திரட்டி, சுட்டு எடுப்பது பலருக்கும் பிடிக்காது. வகைகளை முயற்சி செய்தால் சிலருக்கு சாஃப்ட் சப்பாத்தி செய்யவே வராது. நேரம் அதிகம் எடுக்கும் என நினைத்து சப்பாத்தி செய்யாமல் இனி இருக்கவே வேண்டாம். சட்டென கோதுமை சப்பாத்தி எப்படி செய்வது என பார்க்கலாம்?

quick whole wheat chapati

சப்பாத்தி என்பது இந்திய உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான மற்றும் விரைவாக தயாரிக்கக் கூடிய உணவாகும். இது முழுமையான கோதுமை மாவில் செய்யப்படுவதால் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகம். இது நம்முடைய செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இப்போது நாம் எளிய மற்றும் விரைவாக தயாரிக்கக் கூடிய சப்பாத்தி செய்முறையை விரிவாகப் பார்க்கலாம்.

கோதுமை சப்பாத்தியின் சிறப்புகள்:

Latest Videos

- கோதுமை மாவில் இருக்கும் நார்ச்சத்து, செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- இது உடலில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். எனவே டயாபெட்டிக் நோயாளிகளுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.
- குறைந்த கொழுப்பு உள்ளதால் உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புவோர்களுக்கும் ஏற்றது.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன் (விருப்பம்)
வெந்நீர் - தேவையான அளவு

மேலும் படிக்க:சூடாக தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா? குறையாதா?

செய்முறை:

- முதலில், ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவை போடவும். அதில் உப்பு சேர்த்து, நன்றாக கலக்கவும்.
- சிறிது சிறிதாக வெந்நீர் சேர்த்து, மென்மையான மற்றும் கைகளில் ஒட்டாத மாவாக பிசையவும்.
- மாவை 10-15 நிமிடங்கள் மூடி வைத்து ஊற விடவும். இது சப்பாத்தி மென்மையாக இருக்க உதவும்.
- பின்பு, மாவை சிறிய உருண்டைகளாக பிரித்து, தேவையான அளவிற்கு உருட்டவும்.
- ஒரு தவாவில் மிதமான தீயில் சுட்டு, ஒவ்வொரு பக்கத்திலும் 30-40 விநாடிகள் வரை சுட்டு, குப்புற திருப்பி, நல்ல பொன்னிறமாக வரும் வரை வேக விடவும்.
- சப்பாத்தி மேலே காய்ந்து போகாமல் இருக்க, லேசாக எண்ணெய் அல்லது நெய் தடவி, சூடாக பரிமாறவும்.

சப்பாத்தியை மென்மையாக வைத்திருக்க சில டிப்ஸ்:

- மாவை நன்றாக பிசைந்தால், சப்பாத்தி மென்மையாக இருக்கும். மாவு கைகளில் ஒட்டாத நிலைக்கு வந்த உடன், உள்ளங்கைகளால் நன்கு அழுத்தி 5 நிமிடம் பிசைந்து, துணியை போர்த்தி ஊற விட்டு, 10 நிமிடம் கழித்து திரட்ட ஆரம்பித்தால் சென்மையான சப்பாத்தி கிடைக்கும்.
- நீர் சேர்ப்பதை படிப்படியாக செய்து, தேவையான அளவிற்கு மட்டுமே பயன்படுத்தவும்.
- சப்பாத்தியை சுட்டவுடன் சுடச்சுட மூடிய ஹாட் பாக்சில் வைத்தால், மென்மையாக இருக்கும்.
- மேலும், தண்ணீர் பதம் சரியாக இருந்தால், சப்பாத்தி பஃபிங் (உப்பலாக வரும்) செய்யும்.

மேலும் படிக்க:இந்த 3 பொருட்கள் போதும்...மாதவிடாய் பிரச்சனைக்கு குட்பை சொல்லிடலாம்

சர்விங் குறிப்பு:

- சப்பாத்தியை மிக்ஸ் வெஜிடபிள் கறி, தயிர், குருமா, மைத்தா அல்லது எந்தவொரு கிரேவியுடன் சேர்த்து பரிமாறலாம்.
- கடிமாக மாறி போகாமல் இருக்க, துணியில் சுற்றி சூடாக வைத்தால் நல்லதாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு ஈஸியாக மென்மையாகச் செய்ய, சப்பாத்தியில் லேசாக வெண்ணெய் தடவி பரிமாறலாம்.

இந்த முறையில், உடனடியாகவும் எளிமையாகவும் கோதுமை சப்பாத்தி தயாரிக்கலாம். ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே செய்து மகிழுங்கள்!

vuukle one pixel image
click me!