காசுஇல்லய்ன்னு ஸ்கூல்ல விடல எல்லாம் கஷ்டப்படுற பிள்ளைங்க தமிழக கபடி பிள்ளைகளுக்காக உதவி கேட்க்கும் ரெய்னா..!

First Published Nov 17, 2020, 9:37 AM IST

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு உதவி வேண்டி சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா ட்வீட் செய்துள்ளார்.

அனைவரும் 13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். கபடி விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்ற கனவுடன் இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கினால் இவர்களது பெற்றோர்களின் வாழ்வாதாரம் முடங்கி போய்விட்டது. இதனால் பள்ளிக்கட்டணத்தை கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றன
undefined
தற்போது இவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது, காலை மற்றும் மாலை நேரங்களில் மேற்கொள்ளும் பயிற்சிதான். ஆனாலும் போதுமான நிதி வசதி இல்லாததால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் கபடி போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை’ என பயிற்சியாளர் சதீஷ் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
undefined
சுமார் 15-க்கும் மேற்பட்ட சிறுமிகள் போதுமான பண வசதி இல்லாததால் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான சத்தான உணவை எடுத்துக்கொள்ள முடியாமலும், பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். இந்த விவரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னாவின் பார்வைக்கு சென்றுள்ளது.
undefined
உடனே இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘கபடி விளையாட்டின் மூலம் தங்களது ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த சிறுமிகள் முயன்று வருகின்றனர். தயவுகூர்ந்து அவர்களுக்கு நிதி உதவி அளித்து உதவுங்கள்’ என ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்
undefined
ரெய்னாவின் இந்த மனிதாபிமானம் கொண்ட செயல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்று வருகிறது
undefined
click me!