176 நாட்களுக்கு பிறகு மழை – பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை – ஆர்சிபி – குஜராத் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு

By Rsiva kumar  |  First Published May 4, 2024, 5:57 PM IST

பெங்களூருவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று இரவு நடைபெற இருந்த ஆர்சிபி மற்றும் ஜிடி அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.


ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழாவானது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது 51 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 11 போட்டிகளில் 3ல் வெற்றியும், 8ல் தோல்வியும் அடைந்துள்ளது. மேலும், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. மேலும், எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட ஆர்சிபிக்கு 14 புள்ளிகள் பெறும். அப்படியிருந்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது. ஏற்கனவே முதல் 4 இடங்களில் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முறையே 16, 14, 12, 12 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

இந்த அணிகள் ஏதேனும் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும். ஆனால் ஆர்சிபிக்கு வாய்ப்பு இல்லை. எனினும், கடைசி 4 போட்டிகளில் அதிரடியாக விளையாடி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று 52ஆவது லீக் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 176 நாட்களுக்கு பிறகு பெங்களூருவில் மழை பெய்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், இன்றைய போட்டியானது மழை பெய்யுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அப்படி ஒன்றும் பெரிதாக பாதிப்பு ஏற்படாது என்றும் சொல்லப்படுகிறது. அக்குவெதர் கணிப்பின்படி மழைக்கான வாய்ப்பு மிக குறைவு. ஆயினும் கூட போட்டியின் நடுவில் லேசான மழை பெய்யக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

click me!