ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து.! பிரதமரிடம் பதக்கங்களை காட்டி மகிழ்ந்த வீரர்கள்

First Published Aug 16, 2021, 9:15 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்றது. ஈட்டி எறிதலில் சுதந்திர இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார் நீரஜ் சோப்ரா. பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா, ரவி தாஹியா, மீராபாய் சானு, லவ்லினா ஆகிய வீரர், வீராங்கனைகளும் இந்தியாவிற்கு பதக்கங்களை வென்று கொடுத்தனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. பதக்கம் வெல்லாத வீரர், வீராங்கனைகளும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகளை சுதந்திர தின உரையில் பாராட்டி பேசிய பிரதமர் மோடி, இன்று பிரதமர் இல்லத்தில் விருந்து கொடுத்தார். ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள் பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் கலந்துகொண்டு, பிரதமரிடம் பதக்கத்தை காட்டி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டதுடன், பிரதமருடன் உரையாடினர். அந்த புகைப்பட தொகுப்பு இதோ..
 

சுதந்திர இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தை வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, பிரதமர் மோடியுடன்..
undefined
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய மல்யுத்த அணி வீரர்கள், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி.
undefined
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஆட்டோகிராஃப் போட்ட ஹாக்கி பேட்டை பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர்.
undefined
41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் ஹாக்கியில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.
undefined

மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து, பதக்கத்தை பிரதமர் மோடியிடம் காட்டி மகிழ்ந்தார்.
 

பிரதமர் மோடியுடன் பஜ்ரங் புனியா, ரவி தாஹியா, தீபக் புனியா.
 

click me!