மஹிந்திராவுக்குப் போட்டியாக ஜீப் ரேங்லர் ஃபேஸ்லிஃப்ட்... அதிரடி மாற்றங்கள்... அசத்தும் ஸ்டைல்...

First Published Apr 27, 2024, 5:51 PM IST

ஜீப் புதுப்பிக்கப்பட்ட ரேங்லர் பேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அன்லிமிடெட் ரூ.67.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூபிகான் ரூ.71.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

2024 Jeep Wrangler Facelift

ஜீப் புதுப்பிக்கப்பட்ட ரேங்லர் பேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் என இரண்டு வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. அன்லிமிடெட் ரூ.67.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூபிகான் ரூ.71.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

ஜீப் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறது. இந்தப் புதிய ரேங்லரின் டெலிவரி இந்த ஆண்டு மே மாதத்தின் மத்தியில் தொடங்கும். இந்தப் புதிய ரேங்லர் காரில் பல நுட்பமான அப்டேட்டுகள் உள்ளன. விலையைப் பொறுத்தவரையில், ரேங்லர் ஃபேஸ்லிஃப்ட்டின் இரண்டு மாடல்களும் முந்தைய மாடலை விட ரூ.5 லட்சம் விலை அதிகம்.

Jeep Wrangler Rubicon

அன்லிமிடெட் மாடலின் வெளிப்புறத் தோற்றத்தில் கருப்பு நிற முன்பக்க கிரில் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஆகும். ரூபிகானிலும்  அதே கருப்பு முன்பக்க கிரில் உள்ளது. ஆனால் புதிய 17-இன்ச் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. புதிய முன்பக்க விண்ட் ஷீல்டு கொரில்லா கிளாஸால் ஆனது.

அன்லிம்டெட் மற்றும் ரூபிகான் இரண்டும் சிவப்பு, பச்சை, வெள்ளை, கருப்பு, கிரிஸ்டல் என ஐந்து கலர்களில் கிடைக்கின்றன. இவற்றில், பச்சை நிற வேரியண்ட் அன்லிமிடெட் மாடலில் முன்பு கிடைக்கவில்லை. புதிய ரேங்லரிலும் இன்னும் அதே 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர், பெட்ரோல் மோட்டார் தான் உள்ளது. 266bhp மற்றும் 400Nm முறுக்குவிசையைக் வெளிப்படுத்துகிறது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Jeep Wrangler Unlimited

உட்புறத்தில், புதுப்பிக்கப்பட்ட புதிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஜீப்பின் சமீபத்திய யூ-கனெக்ட் 5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வருகிறது. டாஷ்போர்டு வடிவமைப்பு அதற்கேற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இரண்டும் உள்ளன.

பாதுகாப்புக்காக ஆறு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் ரேங்லர் நான்கு ஏர்பேக்குகள் மட்டுமே இருந்தது. ADAS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. இந்தப் புதிய ரேங்லர் லேண்ட் ரோவர் டிஃபென்டர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

click me!