சம்மர் சேலுக்காக விலையைக் குறைத்த ஸ்கோடா! கோடியாக் காருக்கு செம டிஸ்கவுண்ட் இருக்கு!

First Published | Mar 23, 2024, 5:19 PM IST

ஸ்கோடா ஆட்டோ இந்தியா அதன் முதன்மையான ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் விலையைக் குறைத்துள்ளது. ஆனால், இப்போது L&K டிரிம் மட்டுமே விற்பனையில் உள்ளது.

Skoda Kodiaq SUV

ஸ்கோடா ஆட்டோ இந்தியா அதன் முதன்மையான ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் விலையை குறைத்துள்ளது. இந்த எஸ்யூவி முன்பு ஸ்டைல், ஸ்போர்ட்லைன் மற்றும் எல்&கே ஆகிய மூன்று டிரிம்களில் கிடைத்தது. இப்போது L&K டிரிம் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் எஸ்யூவியின் விலையையும் குறைத்துள்ளது.

Skoda Kodiaq 2024

முன்னதாக, L&K வேரியண்ட் கார் ரூ.41.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்பட்டது. இப்போது ரூ.2 லட்சம் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. இப்போது இதன் விலை ரூ.39.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

Tap to resize

Skoda Kodiaq Variants

டிரிம்களில் மாற்றம் மற்றும் விலை குறைப்பு தவிர எஸ்யூவியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கோடியாக் 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 190hp ஆற்றலையும் 320Nm முறுக்குவிசையையும் வெளிப்படுத்துகிறது. இந்த எஸ்யூவி காரின் எஞ்சின் 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Skoda Kodiaq Price Cut

8.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சுற்றுப்புற விளக்குகள், மூன்று விதமான தட்பவெப்ப கட்டுப்பாடு, பனோரமிக் சன்ரூஃப், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க்கிங், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கோடியாக் எஸ்யூவியில் உள்ளன

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஒன்பது ஏர்பேக்குகள் போன்ற இன்னும் பல வசதிகளும் உள்ளன. டைனமிக் சேஸ் கன்ட்ரோலும் கொடுக்கப்பட்டுள்ளது.

Skoda Kodiaq In India

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் டாடா நெக்ஸான் போன்ற கார்களுடன் போட்டியிடும் புதிய எஸ்யூவியை விரைவில் அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் ஸ்கோடா நிறுவனம் அறிவித்தது. வரவிருக்கும் கார் குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

Latest Videos

click me!