மாருதி சுசுகி நெக்ஸா மாடலுக்கு ரூ.80,000 பல்க் டிஸ்கவுண்ட்! பலேனோ, ஜிம்னி கார்களுக்கு செம டீல்!

First Published | Mar 14, 2024, 5:14 PM IST

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் மார்ச் 2024 இல் அதன் நெக்ஸா (Nexa) மாடல் வாகனங்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது. இன்னும் வேறு பல கார்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளன. ஆனால், இந்தத் தள்ளுபடிகள் மார்ச் இறுதி வரை மட்டுமே கிடைக்கும்.

Maruti Suzuki Ignis

இந்த மாதம், மாருதி சுசுகி இக்னிஸ், 1.2-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின், அதிக சலுகையில் கிடைக்கிறது. இதை வாங்குபவர்கள் கணிசமாக சேமிக்க முடியும். ரொக்க தள்ளுபடி ரூ 40,000, கார்ப்பரேட் போனஸ் ரூ 7,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ 15,000. மொத்த சேமிப்பு ரூ.62,000 ஆகும்.

Maruti Suzuki Baleno

மாருதி சுஸுகி பலேனோ காரை வாங்கினால் ரூ.35,000 ரொக்க தள்ளுபடியும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.7,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கும்; மொத்தமாக ரூ.57,000 வரை சேமிக்கலாம்.

Tap to resize

Maruti Suzuki Fronx

பலேனோ அடிப்படையிலான க்ராஸ்ஓவர் எஸ்யூவியான இது ரூ.10,000 ரொக்கத் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. கூடுதலாக, கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.7,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 மூலம் மொத்தம் ரூ.27,000 சேமிக்க வாய்ப்புள்ளது.

Maruti Suzuki Ciaz

மாருதி சுசுகி சியாஸ் செடானுக்கு இந்த மாதம் ரூ. 25,000 ரொக்கத் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. மற்ற எல்லா மாடல்களைப் போலவே இதற்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 25,000 மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.7,000 என மொத்தம் ரூ.57,000 சலுகை கிடைக்கிறது.

Maruti Suzuki Jimny

மாருதி சுஸுகி ஜிம்னி, SUV பிரிவில் மாருதி நிறுவனத்தின் பேசிக் மாடலாக உள்ளது. மார்ச் மாதம் இந்தக் காருக்கு ரூ.50,000 ரொக்க தள்ளுபடி கொடுக்கப்படுகிறது,

Maruti Suzuki Grand Vitara

கிராண்ட் விட்டாரா மைல்ட் ஹைப்ரிட் டிரிம் மாடல் ரூ. 25,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கிடைக்கிறது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் டிரிம், ரூ.30,000 தள்ளுபடியுடன் ரூ. 50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கிடைக்கிறது.

Maruti Suzuki Offers

நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியண்ட்டைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு மாடல்களுக்கு உரிய தள்ளுபடிகள் பற்றி அறிய மாருதி சுசுகி டீலர்களை அணுகி விசாரிக்கவும்.

Latest Videos

click me!