Triumph Speed 400
ட்ரையம்ப் ஸ்பீட் 400 ஆனது 40 hp மற்றும் 37.5 Nm டார்க்கை வழங்கும் 398 சிசி லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் விலை ரூ.2.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை குறைந்த டிரையம்ப் பைக் இதுதான்.
Bajaj Dominar 400
பஜாஜ் டோமினார் 400 பஜாஜ் நிறுவனத்தின் முதன்மை மோட்டார் சைக்கிள் ஆகும். 40 hp மற்றும் 35 nm டார்க் கொடுக்கும் 373.3சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த மோட்டார் ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் விலை (எக்ஸ்-ஷோரூம்) ரூ.2.30 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
TVS Apache RTR 310
டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 310, த்ரில்-பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், 35.6 hp மற்றும் 28.7 Nm டார்க்கை உடன் 312.2சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சினுடன் உருவாகியுள்ளது. ஸ்போர்ட்டி வடிவமைப்பு கொண்ட இதன் விலை ரூ. 2.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
Honda CB 300R
ஹோண்டா சிபி 300ஆர் 31 hp மற்றும் 27.5 Nm டார்க்கை வெளிப்படுத்தும் ஒரு லிக்விட்-கூல்டு, 286 cc, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம்.
KTM Duke 250
செயல்திறனை விரும்புவோருக்கு இது சரியான சாய்ஸாக இருக்கும். KTM 250 டியூக் 250 cc, 31 hp மற்றும் 25 Nm டார்க்கை வழங்கும் லிக்விட் கூல்டு எஞ்சினைக் கொண்டுள்ளது. இது ரூ.2.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.
Harley-Davidson X440
ஹார்லி-டேவிட்சன் X440 440சிசி, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினைப் பெற்றுள்ளது 27 hp மற்றும் 38 Nm டார்க் கொண்ட இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம் ஆகும்.
Hero Mavrick 440
ஹீரோ மாவ்ரிக் 440 ஹீரோ நிறுவனத்தின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மை மோட்டார் சைக்கிள் ஆகும். இது 27 hp மற்றும் 36 Nm டார்க்கை வெளிப்படுத்தும் 440 cc சிங்கிள்-சிலிண்டர் எஞ்ஜினைக் கொண்டுள்ளது. இது ஆறு கியர்பாக்ஸுடன் ரூ.1.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.