ரூ.50,000 கம்மியாக கிடைக்கும் ஹூண்டாய் கார்! இந்த ஆஃபர் இன்னும் கொஞ்ச நாள் தான்... ஓடுங்க...

First Published | Feb 8, 2024, 3:25 PM IST

ஜனவரியில் உள்நாட்டு சந்தையில் அதிகபட்ச விற்பனையை பதிவு செய்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு ரூ.50,000 கணிசமான தள்ளுபடியை வழங்குகிறது. இந்தச் சலுகை பிப்ரவரி மாதம் மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hyundai Grand i10 Nios

அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் இந்த மாதம் தாராளமான தள்ளுபடியில் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடலுக்கு ரூ.20,000 தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் ரூ.33,000 வரை தள்ளுபடியைப் பெறலாம்.

சிஎன்ஜி அல்லாத மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) கார்கள் ரூ.15,000 தள்ளுபடியைப் பெறுகின்றன. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) கார்கள் ரூ.5,000 சலுகையில் கிடைக்கின்றன.

Hyundai Aura

ஹூண்டாய் ஆரா காருக்கு சிஎன்ஜி மாடலுக்கு ரூ.20,000 தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடி உட்பட மொத்தம் ரூ.33,000 தள்ளுபடி கிடைக்கும். சிஎன்ஜி அல்லாத டிரிம்கள் ரூ. 5,000 தள்ளுபடியுடன் வாங்கலாம். ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 3,000 கார்ப்பரேட் தள்ளுபடியையும் பெறுகின்றன.

Tap to resize

Hyundai i20

ஹூண்டாய் i20 பிரிமியம் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இதன் MT மாடலுக்கு ரூ.15,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மறுபுறம், IVt டிரிம் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கிடைகைகிறது. 1.2 கப்பா MT டிரிம் மொத்தம் ரூ. 20,000 தள்ளுபடியுடன் கிடைக்கும், இதில் ரூ. 10,000 முன் தள்ளுபடி மற்றும் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்கும்.

Hyundai Verna

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இப்போது ரூ.15,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இத்துடன் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் இணைந்து, ரூ.35,000 வரை குறைவான விலையில் விற்பனைக்கு உள்ளது. இந்தச் சலுகைகள் எல்லா வேரியண்ட்டிலும் கிடைக்கும்.

Hyundai Alcazar

ஹூண்டாய் அல்காசர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் உண்டு. ரூ.15,000 ரொக்க தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆனால் கார்ப்பரேட் போனஸ் எதுவும் இல்லை.

Hyundai Tucson

ஹூண்டாய் டியூசன் காரின் டீசல் மாடல் மீது பிரத்தியேகமாக ரூ.50,000 தள்ளுபடி தரப்படுகிறது. ஆனால், பெட்ரோல் மாடல்களுக்கு தள்ளுபடிகள் இல்லை.

Hyundai Venue

ஹூண்டாய் வென்யூ ரூ.15,000 தள்ளுபடியுடன் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். 1.0-லிட்டர் டர்போ டிசிடி டிரிம்களுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி கிடைக்கும். 1.0-லிட்டர் டர்போ எம்.டி. டிரிம்களுக்கு ரூ. 20,000 தள்ளுபடியும் கிடைக்கிறது.

Latest Videos

click me!