TATA விரும்பிகளுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ்.. வரும் ஏப்ரலில் அறிமுகமாகிறது TATA Altroz Racer - விலை என்ன தெரியுமா?

Ansgar R |  
Published : Mar 28, 2024, 03:21 PM IST

TATA Altroz Racer Edition : பிரபல டாடா நிறுவனம் தனது Altroz மாடல் காரின் புதிய Racer எடிஷனை வரவிருக்கும் ஏப்ரல் மாதம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
13
TATA விரும்பிகளுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ்.. வரும் ஏப்ரலில் அறிமுகமாகிறது TATA Altroz Racer - விலை என்ன தெரியுமா?
Tata Altroz Racer

கடந்த 2020ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது முதல் Altroz காரை அறிமுகம் செய்தது பிரபல டாடா நிறுவனம். புகழ்பெற்ற டாடா நிறுவனத்திற்கு இந்திய மக்களிடம் பெரிய அளவிலான வரவேற்பு எப்போதுமே உண்டு, அதைப்போலத்தான் டாடாவின் அல்ட்ரோஸ் மாடல் கார்களுக்கு இந்திய சந்தையில் செம மவுசு. இந்நிலையில் அந்த Altroz காரின் Racer எடிஷன் ஒன்றை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடவுள்ளது டாடா.

Rajini : வேட்டையன் & தலைவர் 171 அப்டேட்ஸ் ரெடி... ஏப்ரல் மாதம் ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்

23
Tata Altroz

2024 Altroz ​​Racer ஆனது 118bhp மற்றும் 170Nm டார்க்கை உருவாக்கும் 1.2-லிட்டர், டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்கள் 6 Speed மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் காரின் ஆட்டோ ட்ரான்ஸ்மிஷசன் உள்ளதா என்பது தெரியவில்லை.

33
Tata Altroz Racer Interior

உட்புறத்தை பொறுத்தவரை, இந்த மாடலில் மின்சார சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், HUD, ஏழு இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, முன் ஹெட்ரெஸ்ட்களில் 'ரேசர்' எம்போசிங் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் 6.65 லட்சம் என்ற விலையில் விற்பனையாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

உலக திரைப்பட வரலாற்றில் புது முயற்சியாக...இரண்டு நாய்கள் மட்டுமே நடித்து வெளியாகும் திரைப்படம் 'கிளவர்'!

Read more Photos on
click me!

Recommended Stories