கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 42ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் லியாம் லிவிங்ஸ்டன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோவ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதே போன்று கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணியில் மிட்செல் ஸ்டார்க் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக துஷ்மந்தா சமீரா போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.
கேகேஆர் விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 32 போட்டிகளில் கொல்கத்தா 21 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பஞ்சாப் கிங்ஸ் 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் ஈடன் கார்டனில் மோதிய 12 போட்டிகளில் கேகேஆர் 9 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டு மொத்தமாக ஈடன் கார்டனில் நடந்த 85 போட்டிகளில் கேகேஆர் 50 போட்டிகளில் வெற்றியும், 35 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.