இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், வேகப்பது வீச்சாளர் முகமது ஷமி, முன்னாள் பயிற்சியாளர அனில் கும்ப்ளே ஆகியோர் தங்களது வாக்கை செலுத்தியுள்ளனர்.
இந்தியாவில் மக்களவை பொதுத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் என்று மொத்தமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து, 13 மாநிலங்களுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பெங்களூருவில் உள்ள டாலர்ஸ் காலனியில் தனது வாக்குரிமையை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட், ஜனநாயகத்தில் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். இது ஜனநாயகத்தில் நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு என்று அவர் கூறியுள்ளார். டிராவிட்டைப் போன்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே தனது வாக்குரிமையை செலுத்தினார். இது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியும் தனது வாக்கை செலுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அம்ரோகாவில் தனது வாக்குரிமையை செலுத்தினார்.