அடிச்ச அடிய மறந்திடலாம், வாங்கிய அடிய மறக்க முடியுமா? நல்ல வேல, டாஸ் ஜெயிச்சு பேட்டிங் தேர்வு செய்த ஆர்சிபி!

By Rsiva kumarFirst Published Apr 25, 2024, 7:39 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 41ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது ஆர்சிபியி 250ஆவது ஐபிஎல் போட்டியாகும். ஆர்சிபியின் முதல் போட்டியில் இடம் பெற்று விளையாடிய விராட் கோலி இன்று ஆர்சிபியின் 250ஆவது ஐபிஎல் போட்டியிலும் இடம் பெற்றுள்ளார். இன்றைய போட்டி விராட் கோலியி 246ஆவது ஐபிஎல் போட்டியாகும். இதில், விராட் கோலி 7642 ரன்கள் விளாசியுள்ளார். 4 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். மேலும், 52 அரைசதங்களும், 8 சதங்களும் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்துள்ளார்.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், மாயங்க் மார்கண்டே, டி நடராஜன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, ஃபாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மகிபால் லோம்ரார், கரண் சர்மா, லாக்கி ஃபெர்குசன், முகமது சிராஜ், யாஷ் தயாள்.

ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த சீசனில் ஆர்சிபி விளையாடிய 8 போட்டிகளில் 7ல் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால், ஹைதராபாத் விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 23 போட்டிகளில் ஆர்சிபி 10 போட்டியிலும், ஹைதராபாத் 12 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. கடைசியாக பெங்களூருவில் இரு அணிகளும் மோதிய 30ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

RCB - 250th Match Today.
Virat Kohli - 246th Match Today.

In 17 years of IPL history, Virat Kohli missed just 4 matches - This is the perfect example of his Passion, commitment, dedication for the game and his love for RCB team. 🐐❤️ pic.twitter.com/RhEjjnh1YD

— Tanuj Singh (@ImTanujSingh)

 

click me!