லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே... பிரபல கிரிக்கெட் வீரர் உட்பட 7 பிரபலங்களுடன் காதலில் இருந்த ஸ்ருதி ஹாசன்!

First Published Apr 27, 2024, 6:28 PM IST

நடிகை ஸ்ருதி ஹாசன் இதுவரை சுமார் 7 பிரபலங்களுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். அந்த 7 பிரபலங்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

தந்தை உலக நாயகன் கமல்ஹாசனை தொடர்ந்து... தென்னிந்திய திரையுலகில் தன்னுடைய திறமையால் முன்னணி நடிகையாகவும், பாடகியாகவும் உயர்ந்தவர் ஸ்ருதி ஹாசன். சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக இருக்கும் இவர், இதுவரை 7 பிரபலங்களுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

சினிமாவில் நடிக்க துவங்கிய போது, பிரபல நடித்தார் சித்தார்த்துடன் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க துவங்கினார் 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இருவரும் டேட்டிங் செய்து வருவதாக டோலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது. சில சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது.

Irfan: மத சர்ச்சையில் சிக்க வைத்த நெட்டிசன்! போடா செங்கல் சைக்கோ! ட்விட்டரில் கிழித்து தொங்கவிட்ட CWC இர்ஃபான்
 

Dhanush (2011)

இதை தொடர்ந்து 2011 -ஆம் ஆண்டு, நடிகர் தனுஷுடன் '3' படத்தில் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்த போது, சில மாதங்கள் தனுஷுடன் ஸ்ருதி டேட் செய்ததாகவும் ... இதனால் ஐஸ்வர்யா - ஸ்ருதி ஹாசன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதோடு, இவர்கள் நட்பிலும் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தனுஷின் விவாகரத்துக்கு இதுவும் ஒரு காரணம் என சினிமாவில் ஒரு பேச்சு அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

2013 -ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஸ்ருதி ஹாசனின் காதல் வலையில் வீழ்ந்தவர் வேறு யாரும் அல்ல... பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா தான். ஒரு சில இடங்களில் இருவரும் ஒன்றாக சந்தித்து கொண்டதால் இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த காதலும் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது.

Sun TV Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பரபரப்பான தொடர் விரைவில் முடிவுக்கு வருகிறது! ரசிகர்கள் ஷாக்.!

Suresh Raina (2014)

இவரை பிரேக் கப் செய்த அடுத்த ஆண்டே... பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் ஸ்ருதி ஹாசன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் இருவரும் வெறும் நண்பர்கள் மட்டுமே என கூறி ஸ்ருதி மற்றும் சுரேஷ் ரெய்னா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
 

Ranbir Kapoor (2014)

இந்த காதல் சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு முன்பே... 2014 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்த தகவலை உறுதி செய்வது போல் இருவரும் ஒன்றாக வலம் வந்த நிலையில், பின்னர் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

Rathnam: வசூல் வேட்டை ஆடினாரா... கோட்டை விட்டாரா விஷால்! 'ரத்னம்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
 

Michael Corsale (2016-2019)

ரன்பீர் கபூர் பிரிவுக்கு பின்னர், முழுமையாக சில வருடங்கள் திரையுலகில் கவனம் செலுத்திய ஸ்ருதி, 2014 ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை லண்டனை சேர்ந்த இசை கலைஞர், மைக்கேல் கோர்சலே என்பவரை காதலித்தார். இவர்கள் இருவரும் திருமண செய்து கொள்வார்கள் என கூறப்பட்ட நிலையில், தங்களில் பர்சனல் காரணங்களுக்காக  பிரிவதாக தெரிவித்தனர்.
 

இவரை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு சாந்தணு ஹசாரிக்கா என்கிற டூன்டூல் கலைஞரை ஸ்ருதி ஹாசன் டைட் செய்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருந்த நிலையில், இந்த காதலும் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா? வதந்தியா? என்பதை விரைவில் ஸ்ருதி தெரிவிப்பார் என தெரிகிறது.
 

click me!