
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இடம் பெற்றிருந்த விராட் கோலி 3 போட்டிகளிலும் 8, 11 மற்றும் 36 என்று மொத்தமாக 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்தும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்று சமநிலையில் உள்ளன.
நியூ இயர் பார்ட்டியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!
இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
தந்தையின் கனவை நிறைவேற்றிய வாஷிங்டன் சுந்தர், கிரிக்கெட் குடும்பத்தைச் சேர்ந்தவர்!
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. தற்போது அவருக்கு வாமிகா என்று ஒரு மகள் இருக்கிறாள்.
இந்த நிலையில், டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார்.
கோலியுடன் கம்பேர் பண்ற அளவுக்கு பாபர் அசாம் ஒரு ஆளே கிடையாது..! ரொம்ப நியாயமா பேசிய மிஸ்பா உல் ஹக்
தற்போது உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் சென்றுள்ள அவர், உள்ள சுவாமி தயானந்த கிரி ஆசிரமத்திற்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். அதுமட்டுமின்றி அங்குள்ள ரிஷிகளுக்கு அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உணவளித்துள்ளனர்.
தனது மகள் வாமிகாவை முதுகில் சுமந்து கொண்டு டிராக்கிங் சென்றுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தோடு துபாய் சென்று அங்கு புத்தாண்டு தினத்தை கொண்டாடினார்.
தனது மகள் வாமிகா உடன் கங்கை நதிக்கு சென்றுள்ள விராட் கோலி, மகளை கங்கை நதியை கையால் அள்ளுமாறு செய்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கையில் ஒரு குச்சியும், முதுகில் தனது மகளையும் சுமந்து கொண்டு டிரக்கிங் சென்றுள்ள விராட் கோலியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிய யூத் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி: இந்தியாவையே பெருமைப்படுத்திய செஸ் சாம்பியன் யுஸ்வேந்திர சகால்!
அதுமட்டுமின்றி, இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி திருனவந்தபுரம் மைதானத்தில் நடந்தது. ஆண்டவா... ஆஸ்திரேலிய தொடரில் சதமா அடிக்கணும்..! ரிஷிகேஷில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி சாமி தரிசனம்
அப்போது இந்திய வீரர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். ஆனால், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் ஓய்வு நேரத்தை செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வரும் ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சாமி தரிசனம் செய்தனர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற, இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடர். இந்த முக்கியமான தொடரில் இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால், விராட் கோலி சிறப்பாக ஆடியாக வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கும் விராட் கோலி, டெஸ்ட்டில் 27 சதங்கள், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தமாக 74 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.