ஆசிய யூத் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி: இந்தியாவையே பெருமைப்படுத்திய செஸ் சாம்பியன் யுஸ்வேந்திர சகால்!

Published : Jan 31, 2023, 04:16 PM IST

செஸ், கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் யுஸ்வேந்திர சகால். 

PREV
117
ஆசிய யூத் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி: இந்தியாவையே பெருமைப்படுத்திய செஸ் சாம்பியன் யுஸ்வேந்திர சகால்!
யுஸ்வேந்திர சகால்

கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கே கே சகால் மற்றும் சுனிதா தேவி. கே கே சகால் ஜிந்த் மாவட்டத்தில் வழக்கறிஞர். அதுமட்டுமில்லாமல் பல்கலைக்கழகம் அளவில் கே கே சகால் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
 

217
செஸ் மற்றும் கிரிக்கெட்

சிறு வயது முதலே செஸ் மற்றும் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவிற்காக செஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை சகால் படைத்துள்ளார்.
 

317
செஸ்

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் ஹரியானா மாநிலத்தை பெருமைப்படுத்தியுள்ளார். மற்ற கிரிக்கெட் வீரர்கள் போன்று சிறுவயதிலேயே சகால் கிரிக்கெட் விளையாடவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் அவர் செஸ் மீது ஆர்வம் செலுத்தி செஸ் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். ஆன்லைன் மூலமாக செஸ் விளையாட்டு குறித்து பல நுணுக்கங்களை கற்றுள்ளார்.
 

417
செஸ் சாம்பியன்

கடந்த 2002 ஆம் ஆண்டில் நடந்த 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய செஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்.

517
அண்டர் 12 ஆசிய யூத் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி

இதே போன்று கோழிக்கூட்டில் நடந்த 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய யூத் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் இந்தியாவை பெருமைப்படுத்தினார். இதைத் தொடர்ந்து கிரீஸில் நடந்த 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார்.
 

617
உலக செஸ் கூட்டமைப்பு

உலக செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ரேட்டிங்கின் படி சகால் 1959ஆவது இடத்தில் உள்ளார். ஆனால், சகாலுக்கு ஸ்பான்சர் யாரும் கிடைக்காததால், அவரது தந்தை ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால், அவரது ஆலோசனையின்படி சகால் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
 

717
கால்பந்து

எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் விளையாட்டு என்றால் மிகவும் பிடிப்பது போன்று, சகாலுக்கு கால்பந்து விளையாடுவதும் பிடிக்கும். செஸ் மற்றும் கிரிக்கெட் போன்று அவருக்கு கால்பந்தும் பிடிக்கும். 
 

817
கூச் பெஹார் டிராபி

கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபியில் லெக் ஸ்பின்னரான சகால் 34 விக்கெட்டுகள் கைப்பற்றி அனைவரது பார்வையையும் தன் மீது விழ வைத்தார்.
 

917
ஐபிஎல்

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் சீசனில் அறிமுகமானார். அதுவும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசு வந்தால், சகாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
 

1017
மும்பையின் சாம்பியன்ஸ் லீக்

அப்போது தான், மும்பையின் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சகால் 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
 

1117
ஹரியானா

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முறையாக பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் விளையாடினார். அதுவும், ஹரியானா அணியில் இடம் பெற்றிருந்த சகால் இந்தூர் அணிக்கு எதிராக விளையாடினார்.
 

1217
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த சகால், அதிக விக்கெட்டுகள் எடுத்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அந்த சீசனில் மட்டும் சகால் 21 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அந்த சீசனில் பெங்களூரு அணி இறுதிப் போட்டி வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

1317
கத்ரினா கைஃப்

பாலிவுட் நடிகையான கத்ரினா கைஃப்பின் அழகில் மயங்கிய சகால், அவருடன் டேட்டிங் செய்யக் கூட விரும்பியுள்ளார். அவரது தீவிர ரசிகனாகவும் இருந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
 

1417
டெல்லி கேபிடல்ஸ் அணி

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சனை அதிக முறை அவுட்டாக்கிய பெருமை சகாலுக்கு உண்டு. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். டி20 போட்டியில் முதல் விக்கெட்டாக மால்கால்ம் வாலரின் விக்கெட்டை கைப்பற்றினார்.

1517
ரவீந்திர ஜடேஜா

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியின் போது ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்குப் பதிலாக களமிறங்கி பந்து வீசினார். இந்தப் போட்டியில் ஒருவருக்குப் பதிலாக களமிறங்கி விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

1617
100ஆவது விக்கெட்

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மாற்று வீரராக களமிறங்கி பந்து வீசி விக்கெட் கைப்பற்றுவது என்பது இதுவே முதல் முறை. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது 100ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்.

1717
தனஸ்ரீ வெர்மா

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி சகால், தனஸ்ரீ வெர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனஸ்ரீ வெர்மா ஒரு பல் மருத்துவர், நடன இயக்குநர் மற்றும் பிரபலமான யூடியூபர் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories