நீயா? நானா? சவாலில் இந்தியா - நியூசிலாந்து: பிட்ச் யாருக்கு சாதகம்?

First Published | Jan 31, 2023, 3:23 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், பிட்ச் யாருக்கு சாதகமாக அமையும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
 

நியூசிலாந்து

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. 

ராஞ்சி மற்றும் லக்னோ

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. ராஞ்சி மற்றும் லக்னோ மைதானம் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு தான் சாதகமாக அமைந்திருந்தது.

Tap to resize

சிக்சர்

இதனால், ஒரு நாள் போட்டிகளில் பவுண்டரியும், சிக்சருமாக விளாசிய வீரர்களால் கூட டி20 போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்கமுடியவில்லை. கடந்த டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், ஒருவர் கூட சிக்சர் அடிக்கவில்லை.
 

இந்தியா வெற்றி

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில், இஷான் கிஷான், ராகுல் திரிபாதி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது.

ஹர்திக் பாண்டியா

போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா பிட்ச் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் விக்கெட் அதிர்ச்சியாக இருந்தது. ராஞ்சி மற்றும் லக்னோ இந்த இரு மைதானங்களுமே டி20 போட்டிக்காக உருவாக்கப்பட்டவை அல்ல.

அகமதாபாத்

நாங்கள் விளையாட செல்வதற்கு முன்னதாக மைதானம் காப்பாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் ஆடுகளங்களை முன்னதாகவே தயார் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இந்த நிலையி, 3ஆவது போட்டியும் இதே மாதிரி அமைந்துவிடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. 
 

3ஆவது டி20

இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த மைதானத்தைப் பொறுத்தவரையில் சிவப்பு மற்றும் கருப்பு மணல் என்று இரண்டிலுமே பிட்சுகள் உள்ளன. 

கருப்பு மற்றும் சிவப்பு மணல்

சிவப்பு மண்ணில் போட்டி நடந்தால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதுவே கருப்பு மண்ணில் போட்டி நடந்தால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

டாஸ் முக்கியம்

எந்த பிட்ச்சிலும் போட்டி நடந்தால் முதலில் ஆடும் அணி சராசரியாக 160 ரன்கள் அடிக்க வாய்ப்பு உள்ளன. நிதானமாக நிலைத்து நின்று ஆட முயற்சிக்க வேண்டும்.

6 டி20 போட்டிகள்

இந்த மைதானத்தில் இதுவரையில் 6 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்யும் அணி 3 போட்டியிலும், சேஸ் செய்யும் அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!